dinamalar telegram
Advertisement

புல்வாமாவில் தேடுதல் வேட்டை: பயங்கரவாதிகள் பதுக்கிய ஆயுதங்கள் பறிமுதல்

Share
ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பதுங்கியிருந்து நாசவேலைகளில் ஈடுபடும் பயங்கரவாதிகளை ஒழிக்க, போலீசார் மற்றும் ராணுவம் இணைந்த கூட்டுப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டர். இதில் ஏராளமான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டு உள்ளன.

கடந்த 14ம் தேதி புல்வாமா மாவட்டம் மெயின் சவுக் பகுதியில் போலீசாரை குறிவைத்து பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில், பொதுமக்கள் 3 பேர் காயமடைந்தனர்.

இந்நிலையில், புல்வாமா மாவட்டத்தின் தெலங்காம் கிராமத்தில் இன்று (செப்., 17) போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில், பயங்கரவாதிகள் பயன்படுத்திய 4 துப்பாக்கிகள், தோட்டாக்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • Ramesh Sargam - Bangalore,இந்தியா

    ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதால் காங்கிரஸ் மற்றும் பல எதிர்க்கட்சியினர் மிகவும் கவலைக்குள்ளாகியுள்ளனர்...

Advertisement