dinamalar telegram
Advertisement

புதுக்கோட்டை, மதுரை, காரைக்காலில் கனமழைக்கு வாய்ப்பு

Share
சென்னை: டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, மதுரை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தென்மேற்கு பருவக் காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று (செப்.,17) டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, மதுரை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் கடலோர மாவட்டங்கள் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக நாளை (செப்.,18) டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், கடலோர மாவட்டங்கள் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

செப்.,19: டெல்டா மாவட்டங்கள், அரியலூர், பெரம்பலூர், கடலூர், சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணிநேரத்திற்கு,வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணிநேரத்தில் பாண்டவையாறு (திருவாரூர்), சிவலோகம் (கன்னியாகுமரி) தலா 5 செ.மீ., திருப்பூண்டி (நாகப்பட்டினம்) 4 செ.மீ., மழைப்பதிவாகியுள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவுமில்லை. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • Senthil kumar - Abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

    மதுரையில் மழையே இல்லை தயவு செய்து இப்படி செய்தி போடாதீர்கள்

Advertisement