dinamalar telegram
Advertisement

உள்ளாட்சி பதவிகள் ஏலம்: மாநில தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

Share
சென்னை: உள்ளாட்சி அமைப்புக்கான பதவிகளை ஏலம் விடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிகளை ஏலம் விடுவோர் மீது மாவட்ட தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஜனநாயகத்திற்கு ஊறு விளைவிக்கப்படுவதை தடுக்க வேண்டும்.
மக்களால், தேர்வு செய்யப்பட வேண்டிய பதவிகளை ஏலம் விடுவது, மக்களின் உணர்வுகளுக்கு எதிரான செயல். அரசியல் அமைப்பு சட்டத்திற்கும், மக்களாட்சி தத்துவத்திற்கு புறம்பாக நடக்கும் செயல் தண்டனைக்குரியது. இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (10)

  • Venkatakrishnan - Mumbai,இந்தியா

    சோறை வலது கையால் தின்பவர்கள் இப்படி ஒரு ஈனமில்லா மானமில்லா செயலைச் செய்யமாட்டார்கள்...

  • RajanRajan - kerala,இந்தியா

    அதுதான் முன்னமே முந்தி கொண்டு அத்தனை அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி சம்பள உயர்வுன்னு தயிர் வடை கொடுத்தாச்சு. இனி அத்தினி பேரும் இமாலய திராவிட அமைதி காப்பானுங்கல்லே. ஐலசா.

  • sankaseshan - mumbai,இந்தியா

    பதவிகள் ஏலத்தில் விடுவது காலம்காலமாக தமிழ்நாட்டில் நடக்கிற்து . தேர்தல் ஆணையத்துக்கு இப்போதான் தெரியுமா

  • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

    இந்த செய்தியிலும் அரசியலா? தலையெழுத்து.

  • JeevaKiran - COONOOR,இந்தியா

    இனி, திரு டி.ன்.சேஷன் அவர்கள் மறுபடியும் பிறந்து வந்தால்தான் உண்டு.

Advertisement