dinamalar telegram
Advertisement

கோவிட் 2வது அலையில் உயிரிழப்பு; உண்மை மறைக்கப்பட்டதாக காங்., குற்றச்சாட்டு

Share
புதுடில்லி: 'மத்திய அரசு, கோவிட் 2வது அலையில் உயிரிழந்தவர்கள் குறித்த எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டியுள்ளது' என, காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த செய்தித் தொடர்பாளர் அஜய் மக்கான் தெரிவித்து உள்ளதாவது:ஐசிஎம்ஆர் அமைப்பால் வழங்கப்பட்ட புள்ளிவிவரங்களை மறைத்துப் போலியான புள்ளிவிவரங்களை வெளியிட அரசியல் தலையீடு அதிகமாக இருந்ததாக அறிவியல் வல்லுநர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஐசிஎம்ஆர் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், நாட்டில் கோவிட் 2வது அலையில், 4,43,497 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுவது தவறானது. உண்மையில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 43 லட்சம் அல்லது அதிகபட்சமாக 68 லட்சமாக இருக்கலாம்.

ஐசிஎம்ஆர் அமைப்பில் பணியாற்றிய அறிவியல் வல்லுநர்கள், அவற்றோடு தொடர்புடைய இடங்களில் பணியாற்றிய அறிவியல் வல்லுநர்கள், அரசியல் தலையீடுகள், கட்டுப்பாடுகள் போன்றவை புள்ளிவிவரங்களை வெளியிடுவதில் அதிகம் இருந்தன எனக் குற்றம் சாட்டுகின்றனர். இது அறிவியலுக்கு எதிரானது மட்டுமல்ல, ஜனநாயகத்துக்கும் எதிரானது. லட்சக்கணக்கான மரணங்களைத் தடுப்பதற்கும் எதிரானது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (9)

  • Vena Suna - Coimbatore,இந்தியா

    ICMR அப்பவே சொல்ல வேண்டியது தானே ? கொழுக்கட்டை இருந்ததா அவங்க வாயில ? கதை விடாதீங்க

  • Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    First ask your government in Maharashtra

  • அப்புசாமி -

    உண்மை தெரிஞ்சாதானே மறைக்க முடியும்? எத்தனை பேர் செத்தாங்கன்னு மாநில அரசுகளுக்கும் தெரியாது. அதனால மத்திய அரசுக்கும் தெரியாது.

  • DVRR - Kolkata,இந்தியா

    ஆமாண்டா நீ சொல்வது நிஜந்தாண் எங்கே தெரியுமா காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் திரிணாமுல் காங்கிரஸ் மாநிலம்-ஒர்ஸ்ட் பெங்கால் கம்ம்யூனிஸ்ட் மாநிலம்-கேரளா தி மு க ஆளும் டாஸ்மாக்கினாட்டில் தான் அது நிகழ்ந்தது உங்கள் அரசு தான் தவறான எண்ணிக்கையை தந்தனர்?. நல்லது செய்ய முடியாவிட்டாலும் பரவாயில்லை கேட்டது செய்யாதீங்கடா தண்டக்கருமாந்திர காங்கிரஸ் கூமுட்டைகளே.

    • வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா

      எனக்கு ஒரு சந்தேகம்....

  • Nagarajan D - Coimbatore,இந்தியா

    ஆமாம் பிஜேபி உண்மையை மறைத்தது... உங்க திருட்டு காந்தி கூட்டமும் நீங்க போடும் எலும்பு துண்டுக்கு அலையும் மீடியாவும் உண்மையை சொல்ல வேண்டியது தானே உத்தர பிரதேசத்தில் கங்கையில் பிணங்களை எந்த களவாணி மதத்தை சேர்ந்தவனோ என்றோ வீசியதை எடுத்து எவ்வளவு தத்ரூபமாக யோகி ஆட்சியில் நடந்தாக ஒரு புருடா விட்டீங்களே உங்கள யாருடா நம்புவானுங்க? எல்லாவற்றிலும் அரசியல் செய்யும் உங்க கம்பெனி முதலாளிக்கும் அறிவு இல்லை அவன் பின்னால் நிற்கும் எவனுக்கும் அறிவு இல்லை

Advertisement