dinamalar telegram
Advertisement

தமிழகத்தில் 5 ஆண்டுகள் நஷ்டத்தில் இயங்கிய டாஸ்மாக்

Share
சென்னை: தமிழகத்தில் 5 ஆண்டுகள் டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்கியதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனத்தில் தான் அதிக வருமானம் வருவதாகவும், அதனால் தான் டாஸ்மாக் கடைகளை திறப்பதில் தமிழக அரசு ஆர்வம் காட்டி வருவதாகவும் பலரும் கூறிவந்தனர். குறிப்பாக கொரோனா பரவல் காலத்திலும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு, தமிழக அரசு வருமானம் ஈட்டி வந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் 5 ஆண்டுகள் டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்கியதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கீழ் பெறப்பட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சென்னையை சேர்ந்த காசிமாயன் என்பவர் டாஸ்மாக் விற்பனை குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி கேட்டிருந்தார்.

இதற்கு தமிழக அரசு அளித்த பதிலின்படி, 2010-11ல் ரூ.3.56 கோடி, 2011-12ல் ரூ.1.12 கோடி, 2012-13ல் ரூ.103.64 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 2013-14ல் ரூ.64.44 கோடி, 2019-20 நிதியாண்டில் ரூ.64.44 கோடிக்கு டாஸ்மாக்கில் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக பதிலளிக்கப்பட்டுள்ளது.

நஷ்டத்தில் இயங்கும் டாஸ்மாக் கடைகளை படிப்படியாக குறைக்கலாமே என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (43)

  • DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ

    நஷ்டம் ஏற்படும் டாஸ் மாக் விடுதிகளை அரசு மூடிவிடுவதே நல்லது.கஜானாவில் மக்கள் செலுத்தும் வீணாக இருப்பதை தடுப்பதே அரசின் கடைமை

  • J. G. Muthuraj - bangalore,இந்தியா

    கடந்த ஐந்தாண்டு பட்ஜெட், வரவு-செலவு கணக்குகளைப்பார்த்து தெரிந்துகொள்ளலாமே .....என் RTI க்கு செல்லவேண்டும்?....சட்டசபை பட்ஜெட் விவாதத்தில், PTR அவர்கள் டாஸ்மாக் பற்றி பேசியதாக ஞாபகமில்லையே.......யாராவது கேள்வி கேட்டால், புள்ளிவிவரங்களை வரிசையாக கொடுத்து விட்டு, அடுத்து ஒப்பீட்டு சதவிகித கணக்கு சொல்வாரு பாருங்க.....கேள்வி கேட்டவர் தலை சுத்தி உட்கார்ந்துவிடவேண்டியது தான்......நான் விடமாட்டேன்....தொடர்ந்து கேள்வி கேட்பேன் என்று நிற்பவர்கள், அம்மா, எம்ஜியாரை சொல்லி தப்பிக்க வகை தேடுவார்கள்.....அதற்கும், PTR ஒரு ரிப்ளை வச்சிருக்கார்.......நான்கு வருடத்தில் நீங்கள் செய்ததை சொல்லுங்கள்....கடந்த காலத்தில், இன்னொருவர் செய்ததை சொல்லி தப்பிக்க முயற்சிக்க வேண்டாம் என்பார்....கேள்வி கேட்டவருக்கு வாய் பேசவராது, PTR ஐ ஒருமுறை முறைத்து பார்த்துவிட்டு உட்காரவேண்டியதுதான்......

  • தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா

    டாஸ்மாக் நஷ்டம் என்பது கட்டுக்கதை ..இப்படி ஒரு கதைசொல்லி ரேஷன் கடைகளில் கட்டாய மது விற்பனையை துவக்கும் விடியாத விடியாமூஞ்சி அரசு ...தரமற்ற மளிகை பொருட்களை வாங்கினால்தான் ரேஷன் பொருட்கள் தர இயலும் என்று கூறும் அரசு , நாளை ஆளுக்கு ஒரு குவாட்டர் கட்டாயம் வாங்கினால்தான் ரேஷன் பொருட்கள் கிடைக்கும் என்று சொன்னாலும் சொல்லும் ..தமிழர்களை தமிழ""குடி மகன்கள்"" ஆக்காமல் ஓயாது விடியாமூஞ்சி அரசு ....

  • Veluvenkatesh - Coimbatore,இந்தியா

    மிக மிக தவறான செய்தி. இது உண்மையாக இருந்தால் ஸ்டாலின் உடனடியாக விற்பனையை தனியார் வசம் ஒப்படைக்க வேண்டும், அரசுக்கு வரி வருவாய் குறையாது அதே சமயம் இந்த டாஸ்மாக் கொள்ளைக்கார ஊழியன் ஒவ்வொருவனுடைய சொத்து மதிப்பை கணக்கிட ரைடு வைக்க வேண்டும். ஐந்து ஆண்டுகளில் எல்லா ஊழியனும் கோடிஸ்வரன் ஆகி விட்டார்கள்.. இது ஏன் எந்த அரசும் கண்டு கொள்ள முடியாது என்கிறார்கள் ?

  • Senthil kumar - Abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

    உண்மைக்கு புறம்பான செய்தி

Advertisement