dinamalar telegram
Advertisement

கோவையில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

Share
Tamil News
தொண்டாமுத்தூர்: கோவையில், ஒற்றை காட்டு யானை தாக்கியதில் முதியவர் உயிரிழந்தார்.
கோவை மாவட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட, விராலியூரை சேர்ந்தவர், சின்னசாமி,63. இவருக்கு, விராலியூர், ஆட்டுக்காரன் கோயில் மலையடிவாரத்தில் தோட்டம் உள்ளது. தோட்டத்திற்கு இவர் தினமும் காவலுக்கு செனறு இரவு தங்குவது வழக்கம். இந்நிலையில், நேற்று இரவு, வழக்கம் போல, தோட்டத்து வீட்டில் கட்டிலில் தூங்கி கொண்டிருந்தார். அதிகாலை, சுமார், 02.00 மணிக்கு, அப்பகுதிக்கு வந்த ஒற்றை யானை, தூங்கிக்கொண்டிருந்த சின்னசாமி தாக்கியுள்ளது. இதில், சின்னசாமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. காட்டு யானையின் சத்தம் கேட்டு, அங்கு சென்ற பக்கத்து தோட்டத்தில் இருந்தவர்கள் சின்னசாமியை, சிகிச்சைக்காக தொண்டாமுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து ஆலந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement