dinamalar telegram
Advertisement

செப்.,17: இன்றைய பெட்ரோல், டீசல் விலை?

Share
சென்னை: சென்னையில் இன்று (செப்.,17), பெட்ரோல் லிட்டருக்கு 98.96 ரூபாய், டீசல் லிட்டருக்கு 93.26 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. 5 மாநில சட்டசபை தேர்தலுக்கு பின், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது, அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.
இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பை அடுத்து, பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு அமலுக்கு வந்தது. அதன்படி நேற்று சென்னையில் பெட்ரோல் லிட்டர் ரூ 98.96 ஆகவும், டீசல் லிட்டர் ரூ 93.26 ஆகவும் விற்பனையானது. இந்நிலையில் 13வது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி அதே விலையில் நீடிக்கிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • RajanRajan - kerala,இந்தியா

    இது நாள் வரை ஜிஎஸ்டிக்கு வெளியே இருந்த டீசல் பெட்ரோலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர இருப்பதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார். இது வரை தர்மேந்திர பிரதான் (முன்னாள் பெட்ரோலிய அமைச்சர் - இந்நாள் கல்வி அமைச்சர்) இதை பற்றி பேசி வந்திருந்தாலும், இம்முறை நிதி அமைச்சரே அந்த விவகாரம் பற்றி பேசியிருப்பதால் மோதி அரசு முடிவெடுத்து விட்டதாகவே தோன்றுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா விலையும் அதிகரித்து வருவதால், இந்தியாவில் இனி டீசல் பெட்ரோல் விலை ஏறுமுகமாக இருக்க வாய்ப்பு. டீசல் பெட்ரோலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர, ஜிஎஸ்டி குழுவின் 75% அனுமதி பெற வேண்டும். பெரும்பாலும் பாஜக ஆளும் மாநிலங்கள் இருப்பதால், இது நிறைவேற வாய்ப்பு. இது நாள் வரை டீசல் பெட்ரோலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வராததற்கு காரணம் மாநிலங்களின் எதிர்ப்பு. இந்த வரிகளில் பெரும் பகுதி மாநிலங்களுக்கே சென்றாலும், ஆர். எஸ் பாரதி ஊடகங்கள் மோதி அரசையே குற்றம் சாட்டி வந்தன. ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வந்தால், இனி எவரும் மோதி அரசின் மீது பழி போட இயலாது. மத்திய அரசுக்கு கிடைத்த வரியிலிருந்து கிட்டத்தட்ட ரூ 15 லட்சம் கோடி கட்டுமானத்தில் (இன்ஃப்ராஸ்டிரக்ச்சர்) செலவிட்டுள்ளது. அவை இப்போது தேசிய சொத்துகள். ஜிஎஸ்டிக்குள் கொண்டு வந்தால், அடுத்த 5 மாநில தேர்தல்களிலும் பாஜகவுக்கு சாதகமாக இருக்கும். ஆனால், டீசல் பெட்ரோல் வரி & சாராயம் ஆகியவற்றை மட்டுமே நம்பி பிழைப்பு நடத்தும் விடியல் அரசு துண்டை தலையில் போட்டுக் கொள்ள வேண்டியதுதான். தேர்தல் வாக்குறுதிகளை - இலவசங்களை - ஒரு போதும் கொடுக்க வாய்ப்பில்லை ராஜா.. ஜெய் ஹிந்த்.. பாரத் மாதா கி ஜெய்..

Advertisement