dinamalar telegram
Advertisement

மாவட்டத்தில் உள்ள 9 ஒன்றியங்களுக்கு 21 பேர் நியமனம்... தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம்

Share
Tamil News
கள்ளக்குறிச்சி-உள்ளாட்சித் தேர்தலையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 9 ஒன்றியங்களுக்கு 21 தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்ட தேர்தல் அலுவலராக கலெக்டர் ஸ்ரீதர் உள்ளார். கலெக்டரின் நேர்முக உதவியாளராக (தேர்தல்) முரளி, நோடல் அலுவலராக, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) குமாரி, தேர்தல் பி.டி.ஓ.,க்களாக ஏகாம்பரம், ராஜேந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.தேர்தல் நன்னடத்தை விதிமுறை கண்காணிப்பாளராக, ஊராட்சி பணிகள் உதவி இயக்குனர் மஞ்சுளா நியமிக்கப்பட்டுள்ளார்.மாவட்டத்தில் உள்ள 9 ஒன்றியங்களில் 21 பேர் தேர்தல் நடத்தும் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி ஒன்றியத்தில், கிராம வார்டு உறுப்பினர், ஊராட்சித் தலைவர் பதவிக்கு தேர்தல் அலுவலராக பி.டி.ஓ., நடராஜன், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு ஊரக வளர்ச்சிப் பணிகள் உதவி இயக்குனர் மாதேஸ்வரன்.சின்னசேலம் ஒன்றியத்தில் கிராம வார்டு உறுப்பினர், ஊராட்சித் தலைவர் பதவிக்கு தேர்தல் அலுவலராக பி.டி.ஓ., துரைசாமி, ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு மாவட்ட வழங்கல் அலுவலர் சிவக்கொழுந்து.கல்வராயன்மலை ஒன்றியத்தில் கிராம வார்டு உறுப்பினர், ஊராட்சித் தலைவர் பதவிக்கு பி.டி.ஓ., ஜெயராமன், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு பிரகாஷ்வேல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.இந்த மூன்று ஒன்றியங்களுக்கும் மாவட்ட கவுன்சிலர் பதவியிடத்திற்கு தேர்தல் அலுவலராக கள்ளக்குறிச்சி மகளிர் திட்ட இணை இயக்குனர் தேவநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.சங்கராபுரம் ஒன்றியத்தில் கிராம வார்டு உறுப்பினர், ஊராட்சித் தலைவர் பதவிக்கு தேர்தல் அலுவலராக பி.டி.ஓ., ராஜேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு உதவி திட்ட அலுவலர் ரத்தினமாலா.ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் கிராம வார்டு உறுப்பினர், ஊராட்சித் தலைவர் பதவிக்கு பி.டி.ஓ., ஆறுமுகம், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு உதவி திட்ட அலுவலர் சார்லஸ் கென்னடி.திருக்கோவிலுார் ஒன்றியத்தில் கிராம ஊராட்சி, ஊராட்சி தலைவர் பதவிக்கு பி.டி.ஓ., ரேச்சல் கலைசெல்வி, ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு துணை பதிவாளர் ராமதாஸ் ஆகியோர் தேர்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளனர்.இந்த மூன்று ஒன்றியங்களிலும் மாவட்ட கவுன்சிலர் பதவியிடத்திற்கு தேர்தல் அலுவலராக, செயற்பொறியாளர் செல்வகுமரன் நியமிக்கப்பட்டுள்ளார்.தியாகதுருகம் ஒன்றியத்தில் கிராம வார்டு உறுப்பினர், ஊராட்சித் தலைவர் பதவிக்கு பி.டி.ஓ., செந்தில்முருகன், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு உதவி திட்ட அலுவலர் சீனுவாசன்.உளுந்துார்பேட்டை ஒன்றியத்தில் கிராம வார்டு உறுப்பினர், ஊராட்சி தலைவருக்கு பி.டி.ஓ., சீனுவாசன், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு வீட்டு வசதி உதவி திட்ட அலுவலர் ராஜசேகர்.திருநாவலுார் ஒன்றியத்தில் கிராம வார்டு உறுப்பினர், ஊராட்சித் தலைவருக்கு பி.டி.ஓ., செல்வகணேஷ், ஒன்றிய கவுன்சிலருக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அப்துல் பாரி ஆகியோர் தேர்தல் நடத்தும் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளனர்.இந்த மூன்று ஒன்றியங்களுக்கான மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு தேர்தல் அலுவலராக மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு நியமிக்கப்பட்டுள்ளார்.இது தவிர 549 உதவி தேர்தல் அலுவலர்கள், 15 பறக்கும் படை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.கிராம வார்டு உறுப்பினர் பதவியிடத்திற்கு போட்டியிட விரும்புபவர்கள், தங்கள் பகுதியில் உள்ள ஊராட்சி அலுவலகத்திலேயே வேட்பு மனு தாக்கல் செய்யலாம். இதற்காக மாவட்டத்தில் உள்ள 412 ஊராட்சிகளுக்கும், உதவி தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.ஊராட்சித் தலைவர், ஒன்றிய கவுன்சிலர் மற்றும் மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்களுக்கு போட்டியிட விரும்புபவர்கள் அந்தந்த பி.டி.ஓ., அலுவலகத்தில் வேட்பு மனு அளிக்கலாம்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement