dinamalar telegram
Advertisement

பள்ளி திறப்புக்கான அறிக்கை தாக்கல்

Share
சென்னை:''பள்ளி திறப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது; முதல்வர் முடிவு எடுப்பார்,'' என, பள்ளி கல்வி அமைச்சர் மகேஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை டி.பி.ஐ., வளாகத்தில், பள்ளி கல்வி அதிகாரிகளை சந்தித்து, அமைச்சர் மகேஷ் ஆலோசனை நடத்தினார். பின், அவர் அளித்த பேட்டி:முதல்வர் அறிவித்த திட்டங்களை செயல்படுத்துவது குறித்து, அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டேன். பள்ளிகளை திறப்பது குறித்து அதிகாரிகளுடன் பேசி, அறிக்கையை முதல்வரிடம் தாக்கல் செய்துள்ளோம்.

பள்ளிகளை திறக்க தேவையான எல்லா விதமான நடவடிக்கை களும் மேற்கொள்ளப் பட்டுள்ளன. உரிய முடிவெடுத்து முதல்வர் அறிவிப்பார்.இவ்வாறு மகேஷ் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement