dinamalar telegram
Advertisement

13 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு

Share
சென்னை:கால்நடை மருத்துவக் கல்லுாரியில் படிக்கும் 13 மாணவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லுாரியில், மூன்றாம் ஆண்டு படித்து வரும் மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இதைத் தொடர்ந்து, மாணவருடன் தொடர்பில் இருந்தவர்கள் உட்பட 579 பேருக்கு, ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், இரண்டு மாணவியர் உட்பட 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து, கால்நடை மருத்துவக் கல்லுாரி முதல்வர் டாக்டர் கருணாகரன் கூறியதாவது: கடந்த 2ம் தேதி, இளநிலை மாணவர் ஒருவருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து, கல்லுாரி முழுதும் 579 மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அறிகுறிகளே இல்லாமல் மேலும் 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

தொற்று உறுதி செய்யப்பட்ட அனைவரும், பெரிய திடலில் உள்ள மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.தொற்று உறுதியானோரில், 11 பேர் விடுதியில் தங்கி படிப்பவர்கள். அவர்கள் தங்கியிருந்த அறைகள் காலி செய்யப்பட்டு, கிருமி நாசினி தெளித்து, தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதைத் தவிர்த்து, மருத்துவக் கல்லுாரிக்குள் நுழையும் அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை, ஆக்சிஜன் அளவு பரிசோதிக்கப்பட்ட பின், உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவரும் நலமுடன் உள்ளனர். கால்நடை மருத்துவக் கல்லுாரியில் படிக்கும் மாணவர்கள், பேராசிரியர்கள், ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டவர்கள். ஒரு சிலர் மட்டுமே, இரண்டாம் தவணை தடுப்பூசிக்கு காத்திருக்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement