dinamalar telegram
Advertisement

இ.எஸ்.ஐ.,யில் மருத்துவ இடம் 20க்குள் வாரிசு சான்று பெறலாம்

Share
சென்னை:இ.எஸ்.ஐ., ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ இடங்களில் சேர்வதற்கான வாரிசுதாரர் சான்றிதழ் பெற, 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

மத்திய அரசின் தொழிலாளர் காப்பீடு கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:இ.எஸ்.ஐ., காப்பீட்டாளர் ஒதுக்கீட்டின் கீழ், சென்னை கே.கே.நகர் இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லுாரியில் 25 இடங்கள்; கோவையில் 20 இடங்கள் உட்பட 382 எம்.பி.பி.எஸ்., இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டில் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க, இ.எஸ்.ஐ., காப்பீட்டாளர்களின் வாரிசு சான்றிதழ் பெறுவது அவசியம்.

எனவே, www.esic.nic.in என்ற இணையதளத்தில், வரும் 20ம் தேதிக்குள், இ.எஸ்.ஐ., காப்பீட்டாளர்களின் வாரிசுதாரர் சான்றிதழ் பெற விண்ணப்பிக்க வேண்டும்.மேலும், காப்பீட்டாளர் வாரிசு சான்றிதழ் பெற, இணையதள விண்ணப்பம் மற்றும் ஆவணங்களை, சம்பந்தப்பட்ட இ.எஸ்.ஐ., கிளை அலுவலகங்களில், 21ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

இதற்காக, சென்னை மண்டல அலுவலகத்தின் கீழ் இயங்கும் இ.எஸ்.ஐ., கிளை அலுவலகங்கள், சனி, ஞாயிற்றுக் கிழமைகளிலும் செயல்படும். மேலும் விபரங்களுக்கு, 044 - 2830 6333 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement