dinamalar telegram
Advertisement

சாபம் வீண் போகாது: துரைமுருகன் பேட்டி

Share
Tamil News
வேலுார்:''நீட் தேர்விற்காக உயிரிழந்த மாணவர்களின் பெற்றோர் சாபம் வீண் போகாது,'' என, நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

வேலுார் மாவட்டம், காட்பாடி அருகே தலையராம்பட்டு கிராமத்தில் சவுந்தர்யா, 17, என்ற மாணவி, 'நீட்' தேர்வு தோல்வி பயத்தில் தற்கொலை செய்து கொண்டார். அமைச்சர் துரைமுருகன், மாணவி வீட்டுக்கு சென்று, பெற்றோர் திருநாவுக்கரசு, ருக்மணிக்கு ஆறுதல் கூறினார்.

பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:நீட் தேர்வு எனும் கொடிய அரக்கனை மத்திய அரசு ஏவி உள்ளது. 10க்கும் மேற்பட்ட உயிர்களை நீட் இதுவரை காவு வாங்கியுள்ளது. அதன் பசி என்று தீரும் என தெரியவில்லை. தமிழக அரசு நீட் தேர்வை தடுக்க வேண்டிய அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது.டில்லியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில், நுாற்றுக்கும் மேற்பட்டோர் இறந்தும் செவி சாய்க்காத மத்திய அரசு, மாணவர்களின் இழப்பிற்கு செவி சாய்க்கவா போகிறது?

நீட் தேர்வு காரணமாக உயிரிழந்த மாணவ - மாணவியரின் பெற்றோர் கோபமும், கண்ணீரும், சாபமும் வீண் போகாது. இன்று இல்லாவிட்டாலும், நாளை 'நீட்' என்ற அரக்கனை ஒழித்து இந்த அரசு முற்றுப்புள்ளி வைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வீரமணி வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்துவது குறித்து கேட்டதற்கு, அது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (13)

  • Bhaskaran - Chennai,இந்தியா

    Neenga periyaar vali vanthavanga

  • Raj - Chennai,இந்தியா

    இது பெரியார் மண், சாபம் பகுத்தறிவா?

  • jayvee - chennai,இந்தியா

    ஒரு வேலை சாபம் பலிக்கும் என்றால் முதலில் காங்கிரெஸ்ஸையும் அதற்க்கு ஆதரவாக NEET விஷயத்தில் வோட்டு போட்ட தீமுகவையும்தான் அது முதலில் அழிக்கவேண்டும்..

  • meenakshisundaram - bangalore,இந்தியா

    துரை முருகனுக்கு ஜே அன்று சட்ட சபையில் என்னமாதிரி வருத்தப்பட்டு (துச்சாதனன் ) 'சாபம் 'இட்டிருப்பர் ?அது அவரின் வாரிசுகளை வாழ விடுமா ?

    • Murugan Vandu - Modipur,இந்தியா

      PLEASE DON'T REPEAT THE SAME COMMENT

  • Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா

    துரைமுருகநும் திமுகவும் ஒன்றை நன்கு புரிந்துகொண்டு பேசவேண்டும். திமுகவிற்கு இருக்கும் அக்கறை காட்டிலும் மேலாக பிஜேபி கட்சிக்கும் மோடிக்கும் உள்ளது. மோடி என்றும் மக்களுக்கு எதிரான ஆட்சியை செய்யமாட்டார் என்பது உறுதி. ஆனால் திமுக தனக்கு ஆதாயத்திற்காக எதையும் செய்யும் கட்சி என்றில்லை பல வருடங்களாக கலைஞர் தலைமையிலிருந்து. ஆதலால் துரைமுருகன் மோடியை எதிர்த்து நிட்டை மக்களிடையே வெறுப்பு உண்டு பன்னால் அந்த சாபம் திமுகவிற்குத்தான் சேரும். பலரும் திமுகவிற்கு சாபம் கொடுத்து கொண்டு இருக்கிறார்கள் ஆதலால் திமுக ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள மக்களிடம் நாடகம் ஆடாமல் உண்மையாக இருப்பது நல்லது.

Advertisement