dinamalar telegram
Advertisement

புதிய தமிழகமும் தனித்து போட்டி

Share
சென்னை:''உள்ளாட்சி தேர்தலில், புதிய தமிழகம் கட்சி தனித்து போட்டியிடும்,'' என, அக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.

அவரது பேட்டி:கொரோனா ஊரடங்கு தடைகள் முழுமையாக நீக்கப்படாமல் உள்ள நிலையில், உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டசபை தேர்தல் நேரத்தில், கொரோனா பாதிப்பு அதிகமானது. தற்போது, மூன்றாவது அலை ஏற்பட வாய்ப்பு உள்ளதால், தேர்தல் நடத்துவது உகந்ததாக இல்லை.

எனவே, மாநில அரசு தேர்தலை சற்று ஒத்தி வைக்க வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிட உள் ளோம். வெற்றி வாய்ப்பு உள்ள இடங்களில் போட்டி யிடுவோம். அதற்கான விருப்ப மனுக்களை இன்றும் நாளையும் கட்சியினர் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement