dinamalar telegram
Advertisement

100 சதவீத இடஒதுக்கீடு ராமதாஸ் விருப்பம்

Share
சென்னை:'தமிழகத்தில் அனைத்து ஜாதியினருக்கும், அவர்கள் பிரதிநிதித்துவத்திற்கு ஏற்ப சமூக நீதி வழங்கும் 100 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதே நம் இலக்கு' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:சென்னை மாகாணத்தால், 1927 நவ., 4ல் அரசு வேலை வாய்ப்புகளில் 100 சதவீதம் இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்த அடித்தளம் அமைக்கப்பட்டது. இதற்கும் 1935ம் ஆண்டில், மத்திய அரசுப் பணிகளில், 100 சதவீத இடஒதுக்கீடு சாத்தியமானதற்கும் அடிப்படையாக அமைந்தது, இந்த அரசாணை தான்.

தமிழகத்தில் அனைத்து ஜாதி மக்களுக்கும், அவர்கள் பிரதிநிதித்துவத்திற்கு ஏற்ப சமூக நீதி வழங்கும் 100 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதே நம் இலக்கு. அந்த இலக்கை சாத்தியமாக்க, இந்த நாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement