dinamalar telegram
Advertisement

இறப்பு சான்றில் குளறுபடி? கலெக்டர்களை அணுகலாம்!

Share
சென்னை:'மருத்துவச் சான்றிதழில் குறிப்பிடப்பட்ட இறப்பின் காரணம் திருப்தி அளிக்காவிட்டால், மாவட்ட கலெக்டரிடம் விண்ணப்பித்து, அதிகாரப்பூர்வ ஆவணப் படிவம் பெறலாம்' என, பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: மத்திய பிறப்பு, இறப்பு பதிவு சட்டம் - 1969ன்படி, ஒரு நபர் கடைசியாக நோயுற்று, எந்த நோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டதோ, அவரது இறப்பிற்குப் பின், அவை தான் இறப்பு சான்றிதழில் பதிவு செய்யப்படும்.கொரோனா இறப்பு என்றால், அதற்கான அதிகாரப்பூர்வ ஆவணத்தை வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை அளிக்க, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, மாவட்ட அளவில் குழு அமைத்து, கொரோனா இறப்பு குறித்து பெறப்படும் மனுக்களை ஆய்வு செய்து, அதிகாரப்பூர்வ ஆவணப்படிவம் வழங்க, வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.எனவே, இறப்பு தொடர்பான மருத்துவச் சான்றிதழில் குறிப்பிடப்பட்ட காரணம் திருப்தி அளிக்காவிட்டால், மாவட்ட கலெக்டருக்கு விண்ணப்பிக்கலாம். மாவட்ட அளவில் அமைக்கப்பட்ட குழுவினரால் பரிசீலிக்கப்பட்டு, கொரோனா இறப்புக்கான ஆவணப் படிவம் வழங்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement