தமிழகத்தில், செங்கல் பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட, ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல், அக்., 6, 9ம் தேதிகளில், இரண்டு கட்டமாக நடக்க உள்ளது. வேட்பு மனுத்தாக்கல், நேற்று முன்தினம் துவங்கியது.
களத்தில் சந்திப்போம்
இத்தேர்தலில், பா.ம.க., - தே.மு.தி.க., - நாம் தமிழர் ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளன. அதேபோல், கமலின் மக்கள் நீதி மய்யமும் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது.இது குறித்து, கட்சியினருக்கு கமல் அனுப்பிஉள்ள சுற்றறிக்கை:ஊரக உள்ளாட்சித் தேர்தலில், மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டியிடுகிறது. நம் முதல் உள்ளாட்சித் தேர்தல் இது. புதிய உத்வேகத்துடனும் ஆற்றலுடனும் இந்தத் தேர்தலை எதிர்கொள்வோம். களத்தில் நிற்கும் உங்கள் கரங்களுக்கு வலு சேர்க்க, நானும் உங்கள் பகுதிக்கு வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கூட்டணி முறிந்தது
கட்சி நிர்வாகிகள் கூறியதாவது:சட்டசபை தேர்தலுக்கு அமைக்கப்பட்ட கூட்டணி அப்போதே முடிந்து விட்டது. சட்டசபை தேர்தலில், கிராமப்புறங்களில் சரிந்த கட்சி கட்டமைப்பை, இத்தேர்தல் வழியாக சரிசெய்ய வேண்டும் என, கமல் உத்தரவிட்டுள்ளார்.மொத்தம் 1,521 வேட்பாளர்கள் களமிறக்கப்பட உள்ளனர். தற்போது, வேட்பாளர் தேர்வில் கவனம் செலுத்தி வரும் கமல், செப்., 25க்கு பின் பிரசாரம் செய்வார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாசகர் கருத்து (6)
நாட்டுக்கு ரொம்ப முக்கியம்
Hassan Bai has acted as Taliban in the movie. He lot of tb fans. He can contest there also. Two Sikhs served as MPs there. Hassan Bai has acted as silkh too
Kamal Dival
நல்ல முடிவு தான் ஆனா........
மீண்டும் ஒருமுறை மண்ணைக்கவ்வ... வாழ்த்துக்கள் பிக்-பாஸ்...