மருந்து குழுமம் அமைக்க ஆய்வு பணிகள் துவக்கம்
சென்னை:மருந்து, பெட்ரோ ரசாயனம், துல்லியமான உற்பத்தி குழுமங்களுக்கான பொது வசதி மையம் அமைப்பதற்கான ஆய்வு பணிகள் துவக்கப்பட்டுள்ளன.'
சிட்கோ' எனும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் சார்பில், ஐந்து பெரும் குழுமங்களுக்கான பொது வசதி மையங்கள், தலா 100 கோடி ரூபாயில் அமைக்கப்பட உள்ளன.
இது குறித்து, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை சார்பில், திண்டிவனத்தில் மருந்து; திருமுடிவாக்கத்தில் துல்லியமான உற்பத்தி; ஓசூரில் பாதுகாப்பு, விண்வெளி; கோவையில் ஸ்மார்ட் போக்குவரத்து குழுமங்களுக்கு தேவையான பொது வசதி மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
பெட்ரோ ரசாயன குழுமம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்படவில்லை. தற்போது, மருந்து, பெட்ரோ ரசாயனம், துல்லியமான உற்பத்தி ஆகிய குழுமங்கள் அமைப்பது குறித்த ஆய்வு பணிகள் துவங்கப்பட்டுள்ளன.முதல் கட்ட ஆய்வு முடிந்து, அறிக்கை வந்த பின், குழுமங்கள் அமைப்பதற்கான பிரதான பணிகள் துவங்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!