dinamalar telegram
Advertisement

வீரமணி வீட்டில் ரெய்டு: பழிவாங்கும் நடவடிக்கை அ.தி.மு.க., கண்டனம்

Share
Tamil News
கென்னை :'முன்னாள் அமைச்சர் வீரமணி வீட்டில் நடத்தப்படும் சோதனை, பழிவாங்கும் படலம். இத்தகைய பயமுறுத்தும் நடவடிக்கைகளுக்கு, அ.தி.மு.க.,வும், அதன் நிர்வாகிகளும் அடிபணிந்ததில்லை' என, அ.தி.மு.க., தலைமை தெரிவித்துள்ளது.

இடையூறுஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் அறிக்கை:சட்டசபை தேர்தலில், நிறைவேற்ற முடியாத 505க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை அளித்து 3 சதவீத ஓட்டு வித்தியாசத்தில், தி.மு.க., ஆட்சிக்கு வந்தது. ஆட்சிக்கு வந்ததும் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல், மக்களின் வெறுப்பை, தி.மு.க., சம்பாதித்துஉள்ளது.அதை மூடி மறைத்து, உள்ளாட்சி தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என, ஆட்சியாளர்கள் கருதுகின்றனர்.இதற்காக, அ.தி.மு.க., வினர் மீது பொய் வழக்குகளைப் பதிவு செய்தும், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தல் என்ற பெயரில், போலீசாரை ஏவி, பலவித இடையூறுகளையும் தொடர்ந்து ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்த வகையில், முன்னாள் அமைச்சர் வீரமணி; அவரை சார்ந்தோர் வீடுகளில், ஸ்டாலினின் போலீசார், சோதனை என்ற பெயரில், ஒரு கபட நாடகத்தை அரங்கேற்றி உள்ளனர்.

இது உள்ளாட்சி தேர்தல் சமயத்தில் திட்டமிட்டு, ஆடும் நாடகமே தவிர வேறொன்றுமில்லை. அ.தி.மு.க., செயல்வீரர்களின் செயல்பாடுகளை சீர்குலைக்கும் வகையில், வீரமணி வீட்டில் நடத்தப்படும் சோதனையை, பழிவாங்கும் படலமாகவே, அரசியல் பார்வையாளர்களும், பொதுமக்களும் பார்க்கின்றனர்.

நடவடிக்கைஇத்தகைய பயமுறுத்தும் நடவடிக்கைகளுக்கு, அ.தி.மு.க.,வும் அதன் நிர்வாகிகளும், செயல் வீரர்களும் அடிபணிந்ததில்லை. சட்டத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது.அ.தி.மு.க.,வினர் மீது பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிட்டு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற, தி.மு.க., அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (11 + 20)

 • K.n. Dhasarathan - chennai,இந்தியா

  ஏன் இந்த பதற்றம்? இவருக்கு செல்லூர் விஞ்ஞானி பரவாயில்லையே? தவறு இருந்தால் தண்டியுங்கள் என்று சொல்லும் மனம் வரவில்லையே? அல்லது லஞ்ச ஒழிப்பு துறை செய்வது தவறு என்று நீதி மன்றத்தில் முறையிட்டு தடை வாங்குங்கள் .

 • RajanRajan - kerala,இந்தியா

  ஆளாளுக்கு வந்து நல்ல கம்பு சுத்தி முட்டு கொடுங்கப்பா. மடியிலே கனமில்லேன்னா தூக்கி கட்டிக்கிட்டு போய்கிட்டே இருக்க வேண்டியது தானே.

 • Believe in one and only God - chennai,இந்தியா

  EPS வீட்டில் ரைடு தேவை. EPS கொலைகுற்றவாளியாக ஜெயிலுக்கு.போவார்

 • mahehkumar11 - chennai,இந்தியா

  வெளிநாட்டு பணத்தை வைத்திருப்பது குற்றமில்லையா? அளவுக்கு மீறி பணம் சம்பாதித்து பினாமிகளிடம் கொடுத்து வைத்தால் இப்படிதான் பாடு

 • sathish - melbourne,ஆஸ்திரேலியா

  இப்போ வயிறு எரிஞ்சு என்ன லாபம் ,, அன்னைக்கே உங்க ஆட்சி இருக்கிறப்போவே முந்திய ஆட்சிகளின் ஊழலை தோண்டி எடுத்து முட்டிக்கு முட்டி தட்டி உள்ளே போட்டு பின்னி இருக்கணும் ஏன் அப்படி செய்யலையினு இப்போ வரூத்த பட்டு உபயோகமா ??

  • RajanRajan - kerala,இந்தியா

   அண்ணனுக்கு இடுப்பு வேட்டி நழுவிடாம புடிச்சுக்கிறதுக்கே நேரமில்லாம கலெக்சன் டூட்டி அதுலே போயி இதெல்லாம் நடக்கிற கதையா.

Advertisement