dinamalar telegram
Advertisement

சமூக நீதி செயல்பாடு கண்காணிக்க குழு

Share
சென்னை:'தமிழகத்தில், சமூக நீதி முழுமையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க குழு அமைக்கப்பட உள்ளது. இதற்கான விதிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்' என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:கடந்த 1921 செப்., 16ல், அன்றைய நீதிக்கட்சி ஆட்சியின் முதல்வரான பனகல் அரசர் காலத்தில், ஓர் அரசாணை பிறப்பிக்கப் பட்டது. 'அரசு பணிகளில் குறிப்பிட்ட வகுப்பினர் ஆதிக்கம் செலுத்தும் நிலை இருக்குமானால், அது நாட்டுக்கு பெரும் தீங்கை விளைவிக்கும். 'அனைத்து சமூகத்தினரும் ஏற்றம் பெறும் வகையில், மக்கள் தொகையை அடிப்படையாக வைத்து, பணியிடங்கள் வழங்கப்பட வேண்டும்' என்ற அடிப்படையில், அந்த அரசாணை வெளியிடப்பட்டது.

அதில் இருந்துதான் சமூகநீதி வரலாற்றின் பயணம் துவங்கியது.இத்தகைய சமூகநீதிப் பயணத்தின் அடுத்த கட்டத்தை தி.மு.க., அறிமுகம் செய்ய இருக்கிறது. சமூக நீதி அளவுகோல் சட்டப்படி உள்ளது. ஆனால், முழுமையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க, தமிழக அரசு சார்பில் ஒரு கண்காணிப்பு குழுவை அமைக்க முடிவெடுத்து உள்ளோம்.

கல்வி, வேலைவாய்ப்பு, பதவிகள், பதவி உயர்வுகள், நியமனங்கள் ஆகிய வற்றில் சமூக நீதி அளவுகோல் முறையாக, முழுமையாக பின்பற்றப்படுகிறதா என்பதை இக்குழு கண்காணிக்கும்; வழிகாட்டும்; செயல்படுத்தும்.சரியாக நடைமுறைப் படுத்தாவிட்டால், உரிய நடவடிக்கை எடுக்க, இக்குழு அரசுக்கு பரிந்துரை செய்யும்.

இதற்கான விதிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். இதில், அரசு அதிகாரிகள், கல்வியாளர்கள், சட்ட வல்லுனர்கள் இடம் பெறுவர். சமூக நீதி அரசாணையின் நுாற்றாண்டு நாளில், சமூக நீதி கண்காணிப்புக் குழுவை அமைப்பதில் பெருமை அடைகிறேன்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement