dinamalar telegram
Advertisement

கால நிர்ணயம் செய்து திட்டத்தை நிறைவேற்றுங்கள்! : துறை செயலர்களுக்கு முதல்வர் அறிவுரை

Share
Tamil News
சென்னை : ''அனைத்து துறைகளும் ஒரு சேர வளரும் வகையில், ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். திட்டங்களை கால நிர்ணயம் செய்து நிறைவேற்ற வேண்டும்; செயல்பாடுகள் குறித்து, வாரம் ஒரு முறை ஆய்வு செய்வேன்,'' என, துறை செயலர்கள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழக அரசின் அனைத்து துறை செயலர்கள் கூட்டம், தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:கொரோனா காலத்திலும் தொய்வின்றி மக்களுக்கு பணியாற்றி, அரசுக்கு சிறப்பான பெயரை தேடித் தந்துள்ளீர்கள்; அதற்கு நன்றி. இந்த ஒத்துழைப்பும், செயல்பாடும் எப்போதும் நீடிக்க வேண்டும்.

உங்களுக்கு பொறுப்புஇனிமேல் தான் உங்களுக்கு கடினமான பொறுப்பு இருக்கிறது.முதல்வர் மற்றும் துறை அமைச்சர்கள் என்ற முறையில், அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளோம்; அவற்றை நிறைவேற்ற, நீங்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்.சட்டசபை தேர்தலின்போது, தி.மு.க., சார்பில் 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. மாவட்ட ரீதியாகவும், ஒரு தேர்தல் அறிக்கை வெளியிட்டிருக்கிறோம்.சட்டசபையில், 110 விதியின் கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளோம். துறைவாரியாக மானிய கோரிக்கை விவாதத்தின்போது, புதிய அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறோம்.இவை அனைத்தையும் நிறைவேற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும், நம்மிடம் தான் இருக்கிறது.

ஒத்துழைப்பு தேவைஇந்த அறிவிப்புகள் அனைத்தையும் படிப்படியாக நாம் நிறைவேற்றியாக வேண்டும். அதற்கு உங்களுடைய முழு ஒத்துழைப்பு அவசியம் தேவை.ஒவ்வொரு அறிவிப்பை நிறைவேற்றுவதிலும் பல கட்டங்கள் உள்ளன. உதாரணமாக ஒரு அறிவிப்புக்கு, பல துறைகளின் ஒத்துழைப்பு, அனுமதி தேவை. அவை குறித்து, அந்தந்த துறைகளின் செயலர்கள் எல்லாம் ஓரிடத்தில் அமர்ந்து, துறை ரீதியான கூட்டத்தை கூட்டி, நீங்கள் தான் முடிவு எடுக்க வேண்டும்.

கால வரம்பு அவசியம்தேவைப்பட்டால் தொடர்புடைய துறைகளோடு, ஒரு துணை கமிட்டி அமைத்துக் கொள்ளலாம். எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும், ஒரு கால வரம்பிற்குள் அமைய வேண்டும்.அறிவிப்பை செயல்படுத்தும்போது, வழக்குகள், நீதிமன்ற தடை பெறுதல் போன்றவை வராமல், பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பும் உங்களிடம் இருக்கிறது. அடுத்த ஆறு மாதங்களுக்கு பின், பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும். அதற்குள் அறிவிப்புகளை செயல்படுத்த வேண்டும்.

'ஆன்லைன்' பலகைஅனைத்து துறைகளில் திட்டங்கள் செயல்படுத்தப்படுவது குறித்த தகவல்களை, நான் அறிந்து கொள்ள, 'ஆன்லைன் தகவல் பலகை' ஏற்படுத்தி, தினமும் பார்க்கப் போகிறேன்; வாரம் ஒரு முறை ஆய்வு செய்யப் போகிறேன்.நாம் நிறைவேற்றும் ஒவ்வொரு திட்டங்களும், தகவல்களும், தகவல் பலகையில் இடம் பெறும். அந்த தகவல்கள் தினமும், 'அப்டேட்' செய்யப்படும். தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் ஆலோசகர், ஒருங்கிணைப்பாளராக இருந்து செயல்படுவார்.அரசாணை போட்டுவிட்டால், அறிவிப்பு நடைமுறைக்கு வந்துவிட்டதாக அர்த்தம் இல்லை. அந்த அறிவிப்பின் பலன் மக்களை சென்றடைய வேண்டும். அப்போது தான், நாம் அறிவிப்பை செயல்படுத்தி விட்டோம் என்று அர்த்தம்.

ஒரு சேர வளர்ச்சிஅனைத்து துறைகளும் ஒரு சேர வளர வேண்டும். அரசு துறைகள் ஒவ்வொன்றும் தனித்தனியாக இயங்காமல், ஒன்றுபட்டு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அப்போது தான் திட்டங்கள், செம்மையான முறையில் மக்களை சென்றடையும்.இவ்வாறு முதல்வர் பேசினார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (10 + 22)

 • Duruvesan - Dharmapuri,இந்தியா

  PLEASE DON'T REPEAT THE SAME COMMENT

 • RAMAKRISHNAN NATESAN - தொங்கவிட்டான்பட்டி,யூ.எஸ்.ஏ

  செத்துப்போன தயிர்வடையின் தலை மாதிரி டுமீல் நாட்டையும் ஆக்கிருவானுவோ

 • Duruvesan - Dharmapuri,இந்தியா

  உலகுக்கே விடியல் தந்த வருங்கால ஜனாதிபதி ஸ்டாலின் அவர்கள் திட்டங்கள் அருமை, நீட் தடை,CAA தடை, விவசாய சட்டம் தடை, கோவில்கள் திறப்பு தடை, விநாயகர் சதுர்த்தி தடை, இனி அரசு அலுவகங்களில் பூஜை செய்ய தடை, கல்லூரி பள்ளிகளில் திருநீர் வைக்க தடை, விரைவில் ஹிந்துக்களை ஒழித்து ஏசப்பாவின் நாடகா மாற்ற போகும் ஸ்டாலின் வாழ்க

 • sathish - melbourne,ஆஸ்திரேலியா

  காற்றுள்ள போதே தூத்தி கொள்ளுங்கள் என்கிறாரா? நேரம் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது, எரிகிற வீட்டில் புடுங்குவது லாபம், அதிகாரிகள் பாவம் போன ஆட்சியில் அவர்கள் பந்தாடினார்கள் இப்போ இந்த வாரிசு, குடும்ப அரசில் இவர்கள் பந்தாடுகிறார்கள். போலீசின் நிலையும் பாவம் தான், அதிகாரிகளை சொல்லி உபயோகம் இருக்கா? பலனை அனுபவிக்க போறது என்னமோ இந்த மந்திரிகள் தான்

 • Mohan - COIMBATORE,இந்தியா

  இந்த விக் தலையன் தொல்லை தாங்க முடியல...

Advertisement