dinamalar telegram
Advertisement

இலவச கண் சிகிச்சை

Share
திருவொற்றியூர்-திருவொற்றியூரில் பா.ஜ., சார்பில், இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.திருவொற்றியூர், புதுதெரு, தனியார் திருமண மண்டபத்தில், பா.ஜ., வடசென்னை கிழக்கு மாவட்டம், அரசு தொடர்புத்துறை பிரிவு சார்பில், பிரதமர் நரேந்திர மோடியின், 71வது பிறந்த நாளை முன்னிட்டு, எம்.என்.கண் மருத்துவமனை மற்றும் மஹாவீர் இன்டர்நேஷனல் இணைந்து நடத்திய, இலவச கண் சிகிச்சை முகாம், நேற்று காலை நடந்தது.இதில், ஏழை எளியோருக்கு கண் தொடர்பான சிகிச்சை நடந்தது. இதில் பார்வை குறைபாடு உடையோருக்கு, இலவச மூக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டன.இலவசமாக கண் அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.மேலும், கொரோனா தடுப்பூசி போடாதோருக்கு, இலவச தடுப்பூசி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இந்நிகழ்ச்சியில், பா.ஜ., அரசு தொடர்பு துறை மாநிலத் தலைவர் பாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement