dinamalar telegram
Advertisement

வியாசர்பாடியில் வெள்ள மீட்பு ஒத்திகை

Share
Tamil News
வியாசர்பாடி--வியாசர்பாடியில், பருவமழை உள்ளிட்ட பேரிடர் காலங்களில், தண்ணீரில் சிக்குவோரை மீட்பது குறித்து, தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தினர்.வடகிழக்கு பருவமழை, வெள்ளம் உள்ளிட்ட பேரிடர் காலங்களில், தண்ணீரில் சிக்கித் தவிப்போரை காப்பாற்றுவது குறித்து, வியாசர்பாடி தீயணைப்பு மீட்பு படை வீரர்களின் ஒத்திகை நிகழ்ச்சி, ஜீவா ரயில் நிலையம் அருகில் நேற்று நடந்தது.இதில், ரப்பர் படகு, லைப் ஜாக்கெட் உள்ளிட்ட உபகரணங்கள் வாயிலாக, வெள்ளத்தில் சிக்கியோரை மீட்பது குறித்து, செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.தெர்மோகோல், லாரி 'டியூப்' மற்றும் வீடுகளில் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு எவ்வாறு மீட்பு பணியில் ஈடுபடுவதும் மற்றும் தன்னை தான் பாதுகாத்து கொள்வது குறித்து, தீயணைப்பு துறையினர் செய்து காண்பித்தனர்.மேலும் முதலுதவி அளிப்பது குறித்தும் ஒத்திகை நடத்திக் காட்டினர்.இதில், வியாசர்பாடியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.மணலிஅதேபோல், மணலி நிலைய தமிழக தீயணைப்பு - மீட்பு பணிகள் துறை, மற்றும் வருவாய்துறை சார்பில், வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் ஒத்திகை காடபாக்கம் ஏரியில், நேற்று மதியம் நடத்தின. மணலி நிலைய அலுவலர் முருகானந்தம், தேவராஜ் தலைமையிலான வீரர்கள் செயல் விளக்கம் அளித்தனர்.இந்நிகழ்ச்சியில், சென்னை புறநகர் மாவட்ட அலுவலர் பாலசுப்பிரமணி, உதவி மாவட்ட அலுவலர்கள், பொன் மாரியப்பன், தனபால், துரை மற்றும், வருவாய் துறை அதிகாரிகள், பொதுமக்கள் என, ஏராளமானோர் பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement