dinamalar telegram
Advertisement

தொண்டு நிறுவன தலைவர் மறைவு

Share
Tamil News
திருவொற்றியூர்-திருவொற்றியூரில் 30 ஆண்டு காலமாக, மக்கள் சேவையாற்றி வந்த, பிரபல தொண்டு நிறுவன தலைவர், உடல்நலக்குறைவால் காலமானார்.திருவொற்றியூர், திருநகரைச் சேர்ந்தவர் மரியசூசை, 77. ரெகாபாத் தொண்டு நிறுவன தலைவர். வடசென்னையில், தொண்டு நிறுவனம் மூலம், நுாற்றுக்கணக்கான மகளிர் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்காவும், சுனாமி பாதிப்பின் போது மீனவர்களுக்கும், வெளிநாடுகளைச் சேர்ந்த பல நிறுவனங்களிடம் இருந்து, பொருளாதார உதவி பெற்று வழங்கியுள்ளார்.வீடு இல்லாதோர் தங்கும் விடுதியும் நடத்தி வந்தார்.மேலும், கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட வெளி மாநில மக்களுக்கு, மாநகராட்சிஉடன் இணைந்து பல உதவிகள் செய்தார்.பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வந்த மரியசூசை, நேற்று அதிகாலை காலமானார். அவரது உடலுக்கு, அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement