dinamalar telegram
Advertisement

நகை மதிப்பீட்டாளர் பயிற்சி

Share
சென்னை--மாதவரத்தில், தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி 20ம் தேதி துவங்குகிறது.இது குறித்து, மத்திய பனைப் பொருட்கள் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:மாதவரம் பால் பண்ணை, குமாரப்பாபுரத்தில் உள்ள மத்திய பனை பொருட்கள் நிறுவன பயிற்சி நிலையத்தில், தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி, 20ம் தேதி துவங்குகிறது.தொடர்ந்து, 10 நாட்கள் பயிற்சி நடக்க உள்ளது. இதில் தங்கத்தின் விலை மதிப்பிடும் முறை, கொள்முதல் செய்யும் முறை, தரம் கண்டறிதல் உள்ளிட்ட பயிற்சி அளிக்கப்பட உள்ளது.இந்த பயிற்சியில், 18 வயது நிரம்பியோர் பங்கேற்கலாம். பயிற்சியின் முடிவில் சான்றிதழ்கள் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு 94437 28438 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement