dinamalar telegram
Advertisement

சிறப்பு வளர்ச்சி உரிமை விற்பனை கட்டுமான நிறுவனங்களுக்கு வாய்ப்பு

Share
சென்னை-சென்னையில், ஏழு இடங்களில் சிறப்பு வளர்ச்சி உரிமை விற்பனைக்கு வந்துள்ளதாக, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.சென்னை பெருநகருக்கான இரண்டாவது முழுமை திட்டம், 2008ல் அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் வளர்ச்சி உரிமை மாற்றும் திட்டம் அறிவிக்கப்பட்டது.இதன்படி, 1,000 சதுர அடி நிலத்தை அரசு கையகப்படுத்தினால், அதில், எந்த அளவுக்கு கட்டடம் கட்ட அனுமதிக்கப்படுமோ, அந்த உரிமையை வேறு இடத்தில் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்படுவர்.அறிவிப்புமெட்ரோ ரயில் உள்ளிட்ட திட்டங்களுக்கு, இதன் அடிப்படையில் சில பகுதிகளில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இந்நிலையில், குடிசை பகுதிகளை மேம்படுத்தும் திட்டத்தில், இந்த வழிமுறையை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.இதன்படி, சென்னை புரசைவாக்கத்தில், ஏழு இடங்களில் உள்ள நிலங்களுக்கு சிறப்பு வளர்ச்சி உரிமை மாற்ற சான்றுகளை, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துக்கு, சி.எம்.டி.ஏ., வழங்கியது.இந்த வளர்ச்சி உரிமைகளை விற்க முடிவு செய்து, அதற்கான அறிவிப்பை, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுத்தது.சென்னையில், புதிய அடுக்குமாடி திட்டங்களை செயல்படுத்தும் நிறுவனங்கள் முன்வந்தால், இந்த சான்றுகள் வழங்கப்படும் என தெரிகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement