dinamalar telegram
Advertisement

புழல் சிறையில் தேர்வெழுதும் கைதிகள்

Share
புழல்-கொரோனா ஊரடங்கால் தள்ளி வைக்கப்பட்ட பள்ளி படிப்பிற்கான தேர்வை, புழல் சிறை கைதிகள் எழுதினர்.சென்னை, புழல் மத்திய சிறையில், கடந்தாண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக, பிளஸ் 1 தேர்வுகளை எழுத முடியாத கைதிகள், நேற்று முதல் அந்த தேர்வை எழுதுகின்றனர்.புழல் தண்டனை சிறை கைதிகள், 14 பேர், விசாரணை சிறை கைதிகள், 2 பேர், மகளிர் சிறை கைதிகள், 5 பேர் என மொத்தம், 21 பேர் எழுதுகின்றனர். அவர்களில், அல் - உம்மா பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த தண்டனை கைதியான போலீஸ் பக்ருதீனும், 38, ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.அவர் மீது, ஹிந்து முன்னணி தலைவர்கள் கொலை வழக்கு உட்பட பல வழக்குகள் உள்ளன. மேற்கண்ட கைதிகள், பலத்த கண்காணிப்புடன் தேர்வுகளை எழுதுகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement