dinamalar telegram
Advertisement

தற்கொலை முயற்சி: சிறுமி பத்திரமாக மீட்பு

Share
மெரினா,--சென்னை மெரினா கடற்கறையில், தற்கொலை எண்ணத்தில் சுற்றி திரிந்த சிறுமியை போலீசார் பத்திரமாக மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்தனர். நொச்சிகுப்பம் அருகே உள்ள கடற்கரை மணற்பரப்பில், நேற்று முன்தினம் இரவு, 15 வயது சிறுமி சுற்றி திரிந்தார். இதை பார்த்த மெரினா போலீசார், உடனே சிறுமியிடம் விசாரித்தனர். இதில், ஆம்பூரைச் சேர்ந்தவர் என்பதும் பெற்றோர் கண்டித்ததால் கோவித்துக் கொண்டு தற்கொலை செய்து கொள்வதற்காக பஸ்சில் மெரினாவிற்கு வந்ததும் தெரியவந்தது.தொடர்ந்து மயிலாப்பூரில் உள்ள மகளிர் காப்பகத்தில் சிறுமியை தங்க வைத்தனர். நேற்று, அவரது பெற்றோரை சென்னைக்கு வரவழைத்து, அவர்களிடம் விசாரித்த பின், சிறுமியை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement