dinamalar telegram
Advertisement

தங்கம் கடத்தி வந்த பெண் விமான நிலையத்தில் கைது

Share
Tamil News
சென்னை--மலக்குடலில் மறைத்து, 65 லட்சம் ரூபாய் மதப்பிலான, 1.34 கிலோ தங்கம் கடத்தி வந்த பெண்ணை, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்தனர்.சென்னை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகளுக்கு, கேரளா மாநிலம் கொச்சியைச் சேர்ந்த வருவாய் புலனாய்வு துறையினர் ரகசிய தகவல் அளித்தனர். அந்த தகவலின் படி, துபாயிலிருந்து வந்த எமிரேட்ஸ் பயணியரிடம் அதிகாரிகள் சோதனை செய்தனர்.அப்போது, 28 வயது மதிக்கத் தக்க பெண், மலக்குடலில் தங்கத்தை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.அவரிடமிருந்து, 24 கேரட் தரம் உடைய, 65 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 1.34 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தங்கத்தை கடத்தி வந்த பெண்ணை, சுங்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement