dinamalar telegram
Advertisement

மதுபோதையில் தப்பிய கைதி: மருத்துவமனையில் சிகிச்சை

Share
ஊட்டி : ஊட்டி கோர்ட்டில் இருந்து தப்பி ஓடிய கைதி மதுபோதையில் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நீலகிரி மாவட்டம், குன்னுார் அனிஹாடா பகுதியை சேர்ந்தவர் பென்னி, 57; கூலித் தொழிலாளி. மனைவி அந்தோணியம்மாள், 50. இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. 2017 ஏப்., 24ல் மதுபோதையில் இருந்த பென்னி, மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்தார்.அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின், ஜாமினில் வெளியே வந்தார். வழக்கு ஊட்டி மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது,நேற்று முன்தினம் இறுதி தீர்ப்பையொட்டி, பென்னியை கொலக்கம்பை போலீசார் அழைத்து வந்து, ஊட்டி மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பென்னி அங்கிருந்து 'எஸ்கேப்' ஆனார். அதிர்ச்சியடைந்த போலீசார் பல இடங்களில் தேடினர். ஒரு வழியாக குன்னுார் வண்டிசோலையில் பிடித்தனர்.போதை தலைகேறி படுத்திருந்த பென்னியை அழைத்து வந்து, ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதால், இரண்டாம் நாளாக, தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement