dinamalar telegram
Advertisement

நீட் தேர்வு எழுதிய மாணவி துாக்கிட்டு தற்கொலை

Share
வேலுார் : 'நீட்' தேர்வு எழுதிய காட்பாடியை சேர்ந்த மாணவி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வேலுார் அருகே, காட்பாடி அடுத்த தலையாரம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் திருநாவுக்கரசு, 63; மனைவி ருக்மணி, 50. தம்பதியின் மகள் சவுந்தர்யா, 17, வேலுார் தோட்டப்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து, 510 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். இவர் மருத்துவ படிப்பில் சேர, நீட் தேர்வு பயிற்சி பெற்றார்.கடந்த, 12ல் கிங்ஸ்டன் பொறியியல் கல்லுாரியில் நீட் தேர்வு எழுதினார். தேர்வு கடினமாக இருந்ததாகவும், சரியாக எழுதவில்லை என்றும் தாய், தந்தையிடம் சொல்லி புலம்பியுள்ளார். பெற்றோர் ஆறுதல் கூறினர்.நேற்று காலை பெற்றோர் வெளியே சென்று வீட்டுக்கு திரும்பிய போது, சவுந்தர்யா துாக்கில் தொங்கியது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.லத்தேரி போலீசார் மாணவியின் உடலை மீட்டு, வேலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், சவுந்தர்யா 'நீட்' தேர்வு தோல்வி பயத்தால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement