dinamalar telegram
Advertisement

கோயம்பேடில் பயணியிடம் ரூ.4 லட்சம் கேமரா திருட்டு

Share
கோயம்பேடு-கோயம்பேடில் பயணியிடம், 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான கேமராவை திருடி சென்ற மர்மநபர் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.எம்.ஜி.ஆர்., நகர் அண்ணா குடியிருப்பைச் சேர்ந்தவர், கார்த்திக், 33. இவர், கடந்த 9ம் தேதி, காஞ்சிபுரம் செல்ல கோயம்பேடு பேருந்து நிலையம் சென்றார்.அங்கு, ஒன்றாவது நடைமேடையில் நின்ற, காஞ்சிபுரம் செல்லும் பேருந்தில் ஏறி, தன் இருக்கையின் மேல் உள்ள பகுதியில், 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான கேமராவை வைத்துள்ளார்.சிறுது நேரம் கழித்து பார்த்தபோது, கேமரா திருடு போனது தெரியவந்தது. நேற்று முன்தினம் அவர், கோயம்பேடு பேருந்து நிலைய காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement