dinamalar telegram
Advertisement

பலே திருடர்கள் கைது 10 டூ - வீலர்கள் பறிமுதல்

Share
கோயம்பேடு-இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட சிறுவன் உட்பட இருவரை கைது செய்த போலீசார், 10 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.நெற்குன்றம், ராஜிவ் காந்தி நகரைச் சேர்ந்தவர் பாலாஜி, 35. இவரது வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம், சில மாதங்களுக்கு முன் திருடு போனது. இது குறித்து கோயம்பேடு போலீசார் விசாரித்தனர்.இது தொடர்பாக, கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்ததில், சிறுவன் ஒருவன் இருசக்கர வாகனத்தை தள்ளிச் செல்வது தெரிய வந்தது.விசாரணையில், ஆழ்வார் திருநகரைச் சேர்ந்த, 17 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.தொடர் விசாரணையில், மேட்டுக்குப்பம் லட்சுமி நகரைச் சேர்ந்த பாலிடெக்னிக் மாணவர் யோகேஷ், 20, என்பவருடன் சேர்ந்து, திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.இருசக்கர வாகனம் ஓட்ட தெரியாததால், தள்ளிச் சென்றதை ஒப்புக் கொண்டார். இதையடுத்து, யோகேஷையும் போலீசார் கைது செய்தனர்.திருடிய வாகனங்களை, லட்சுமி நகர் அருகே உள்ள புதரில் மறைத்து வைத்து, பின், அவற்றை, 2,000 முதல் 2,500 ரூபாய்க்கு, புதுப்பேட்டையில் விற்பனை செய்து, கஞ்சா, மது உள்ளிட்ட போதை வஸ்துக்கள் வாங்கி பயன்படுத்தி வந்துள்ளனர்.இருவரையும் கைது செய்த போலீசார், 10 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement