dinamalar telegram
Advertisement

பாதுகாப்பு துறை சார்பில் பனை மரக்கன்று நடவு

Share
மீனம்பாக்கம்---மீனம்பாக்கத்தில், பாதுகாப்பு துறை அமைச்சகத்தின், தர ஆய்வு அலுவலகம் சார்பில், பனைமரக் கன்றுகள் நடப்பட்டன.சென்னை, மீனம்பாக்கத்தில், பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின், தர ஆய்வு அலுவலகம் இயங்கி வருகிறது.அங்கு, அத்துறைக்கான அனைத்து வகையான கொள்முதல் பொருட்களும் தர ஆய்வு செய்து, தர சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. அந்த அலுவலகம் சார்பில் சுற்றுச்சூழல், நிலத்தடி நீரை பாதுகாக்கும் வகையில், பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.அதன் ஒரு பகுதியாக, 100 பனைமரக் கன்றுகள் நடும் திட்டம், நேற்று செயல்படுத்தப்பட்டது.அலுவலக மூத்த தர ஆய்வு அதிகாரி டெக்கா தாஜ் தலைமையில், சக அதிகாரிகள், அலுவலர்கள் அலுவலக வளாகத்தில் பனைமரக் கன்றுகளை நட்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement