dinamalar telegram
Advertisement

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Share
பல்லாவரம்--பல்லாவரத்தில், நீதிமன்ற உத்தரவுப்படி சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.பல்லாவரம் நகராட்சிக்கு உட்பட்ட ஜமீன் பல்லாவரம் தர்ஹா சாலையில், 30 அடி அகலம் கொண்ட சாலையை ஆக்கிரமித்து, வரிசையாக கடைகள், வீடுகள் கட்டப்பட்டிருந்தன. இதனால் சாலை சுருங்கியது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது. இதையடுத்து, போலீஸ் பாதுகாப்புடன் பல்லாவரம் நகராட்சி நகரமைப்பு பிரிவினர், சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த ஏழு கடைகள் மற்றும் ஏழு குடியிருப்புகளின் ஒரு பகுதியை ஜே.சி.பி., இயந்திரத்தால் இடித்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement