dinamalar telegram
Advertisement

அடிப்படை வசதிகள் இல்லை நெடுங்குன்றம் வாசிகள் புகார்

Share
தாம்பரம்- நெடுங்குன்றம் மற்றும் அதை சுற்றிய பகுதிகளில், பல ஆண்டுகளாக, அடிப்படை வசதிகள் ஏதும் செய்து கொடுக்கப்படாமல் இருப்பதாக, அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக, சென்னை வரும் வாகனங்கள், தாம்பரம் அடுத்த பெருங்களத்துாரில் இருந்து, ஜி.எஸ்.டி., மற்றும் வேளச்சேரி சாலை வழியாக, நகருக்குள் நுழைய வசதியாக, 'ஈஸ்டர்ன் பை - பாஸ்' சாலை திட்டத்திற்கான, பணிகள் நடந்து வருகின்றன.இதன் ஒரு பகுதியாக, நெடுங்குன்றம் ஊராட்சிக்கு உட்பட்ட, புத்துார் - மப்பேடு சாலையின் பிரதான சாலை, புதுப்பிக்கும் பணிகள் துவங்கி நடந்து வருகின்றன.பல மாதங்களாக சேதமடைந்திருந்த சாலை சீரமைக்கப்படுவது, அப்பகுதி மக்களிடையே, வரவேற்பை பெற்றிருந்தாலும், ஊராட்சிக்குட்பட்ட சாலைகள் சீரமைக்கப்படாதது, அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.இது குறித்து, அப்பகுதியைச் சேர்ந்த, சமூக ஆர்வலர், சிற்றரசன், 35, கூறியதாவது:பிரதான சாலை சீரமைக்கப்பட்டாலும், நெடுங்குன்றம் ஊராட்சிக்குட்பட்ட கொளப்பாக்கம், ஆலப்பாக்கம், சதானந்தபுரம், நெடுங்குன்றம், புத்துார் - மப்பேடு பகுதிகளில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சாலைகள் சீரமைக்கப்படவில்லை.குடிநீர் வசதியும் சரிவர கிடைக்காமல், பகுதி மக்கள் பலர் அவதியுறுகின்றனர்.ஊராட்சி செயலருக்கு, இது பற்றி, பல புகார்கள் சென்றும் அவர் அதை கண்டுகொள்ளவில்லை. உயர் அதிகாரிகள் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement