dinamalar telegram
Advertisement

வடிகாலில் துார் வாரிய மண்ணை எடை போட்டு கொட்ட உத்தரவு தடுப்பு கற்களால் விபத்து அபாயம்

Share
வேளச்சேரி-மழைநீர் வடிகால்களை துார் வாரும்போது அள்ளும் மண்ணை, குப்பை கிடங்கு கொண்டு சென்று, எடை போட்டு கொட்ட வேண்டும் என, மாநகராட்சி வலியுறுத்தி உள்ளது.அடையாறு மண்டலம், 177, 178, 179 ஆகிய வார்டுகள், வேளச்சேரி பகுதியை உள்ளடக்கியவை. இதில், 1,200க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன.இந்த வார்டுகளை சுற்றி, ஏரி, வீராங்கால் கால்வாய், மூடு கால்வாய் உள்ளது. தெருக்களில் உள்ள வடிகால்களில் வடியும் மழை நீர், ஏரி, கால்வாய் வழியாக சதுப்பு நிலத்தை அடைகிறது.ஒவ்வொரு பருவ மழைக்கும், வேளச்சேரி பகுதி கடுமையாக பாதிக்கப்படும். இங்குள்ள, பெரும்பாலான வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. பருவ மழை துவங்கும் முன், துார் வாரி நீரோட்டம் தடையின்றி செல்லும் வகையில் சீரமைக்கும் பணி துவங்கி உள்ளது.பல இடங்களில், கரையில் கொட்டி வைக்கப்படும், வடிகால்களில் அள்ளிய மண்ணை அப்புறப்படுத்துவதில்லை. இதனால், கரையில் கொட்டிய மண், மீண்டும், வடிகாலில் இறங்கி அடைப்பு ஏற்பட்டது.இம்முறை, வடிகாலில் அள்ளப்படும் மண்ணை, பெருங்குடி குப்பை கிடங்கு கொண்டு சென்று எடைபோட்டு கொட்ட, ஒப்பந்ததாரர்களுக்கு வலியுறுத்தப்பட்டு உள்ளது.துார் வாரும் பணிக்கு நிதி வழங்கும்போது, மண்ணின் எடையையும் கணக்கிட, மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதன்மூலம், துார் வாரிய மண், மீண்டும் வடிகாலில் விழுவது தடுக்கப்படும் என, அதிகாரிகள் கூறினர்.அண்ணா நகர் மண்டலம், 107வது வார்டில், சாரி சாலை உள்ளது. ஹாரிங்டன் சாலை மற்றும் ஹாரிங்டன் சுரங்கப்பாதை இணைக்கு இந்த சாரி சாலையில் வாகன ஓட்டிகள் விதிமீறாமல் இருக்க, மையத்தில் தடுப்பு கற்கள் வைக்கப்பட்டன.தற்போது அவை அங்கும் இங்குமாக சிதறி கிடக்கின்றன. இதனால், வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இரவு நிலைமை மேலும் மோசமாகும். எனவே, விபத்து ஏற்படும் முன், சம்பந்தப்பட்ட அதிகாரிகள், தடுப்பு கற்களை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement