dinamalar telegram
Advertisement

தீயணைப்பு துறையினர் வானகரத்தில் ஒத்திகை

Share
வானகரம்-பருவ மழை மற்றும் பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வானகரம் சுப்பிரமணிய சுவாமி கோவில் குளத்தில், தீயணைப்புத் துறையினர் நேற்று ஒத்திகை நடத்தினர்.வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தீயணைப்புத் துறை சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.அந்த வகையில், கோயம்பேடு தீயணைப்புத் துறையினர் சார்பில், நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையில், வானகரம் சுப்பிரமணிய சுவாமி கோவில் குளத்தில் நேற்று ஒத்திகை நடந்தது.இதில், வெள்ளத்தில் சிக்கிக் கொண்டால் வீடுகளில் உள்ள தண்ணீர் கேன், பிளாஸ்டிக் குடம், தண்ணீர் பாட்டில்கள், லாரி டியூப், வாழைத் தண்டு, காலி சிலிண்டர் போன்ற மிதவைகளைப் பயன்படுத்தி, தங்களை தாங்களே எவ்வாறு காப்பாற்றுவது என, தீயணைப்பு வீரர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர்.ரப்பர் படகு வாயிலாக, வயதானோர், நோய்வாய்ப்பட்டோர் மற்றும் கால்நடைகளை எவ்வாறு காப்பாற்றுவது, தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடுவோரை காப்பாற்றி முதலுதவி அளிப்பது குறித்தும் பொதுமக்கள் முன்னிலையில் செய்து காண்பித்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement