dinamalar telegram
Advertisement

நிரம்பி வழியும் திறந்தவெளி வடிகால்

Share
ராமாபுரம்,-ராமாபுரம் பஜனை கோவில் தெருவில், நிரம்பி வழியும் திறந்தவெளி வடிகாலால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.வளசரவாக்கம் மண்டலம் ராமாபுரத்தில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டிஉள்ளன. இதுவரை பாதாள சாக்கடை இல்லாத காரணத்தால், குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், திறந்த வெளி மழை நீர் வடிகாலில் விடப்படுவது வாடிக்கை.இதில், ராமாபுரம் 155வது வார்டு பஜனை கோவில் தெருவில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், அச்சாலையில் உள்ள வடிகாலில் விடப்படுகிறது.இதில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் அடிக்கடி கழிவு நீர் சாலையில் தேங்கி விடுகிறது. இது குறித்து, மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தால் தற்காலிகமாக சரி செய்து விடுகின்றனர்.அதனால் சில நாட்களில் மீண்டும் கழிவு நீர் தேங்கி விடுகிறது. எனவே, இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement