dinamalar telegram
Advertisement

ஓவியத்தால் ஜொலிக்கும் அம்மா உணவகம்

Share
கோடம்பாக்கம்-கோடம்பாக்கம் 'அம்மா' உணவகம், பாரம்பரிய சமையல் அறை ஓவியத்தால் கண்ணை கவருகிறது.'சிங்கார சென்னை - 2.0' திட்டத்தில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கட்டடங்களில், ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன.அந்த வகையில், கோடம்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட, சாலிகிராமம், அருணாச்சலம் சாலையில் உள்ள, 129வது வார்டு அலுவலகம்; 140வது வார்டு கோடம்பாக்கம் சாலையில் உள்ள 'அம்மா' உணவகம், 139வது வார்டு ஜாபர்கான்பேட்டையில் உள்ள சென்னை மாநகராட்சி பள்ளி சுற்றுச்சுவர் என, பல்வேறு இடங்களில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.இதனால், போதிய பராமரிப்பு இல்லாமல் இருந்த சுற்றுச்சுவர்கள், கண்ணை கவர்ந்து வருகின்றன. மாநகராட்சியின் இந்த முயற்சி, பகுதிவாசிகளிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.ஆனால், தொடர்ந்து ஓவியங்கள் வரைய, நன்கொடையாளர்கள் கிடைக்காததால், மாநகராட்சி அதிகாரிகள் செய்வதறியாமல் திகைத்து வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement