dinamalar telegram
Advertisement

-"என்னை இன்ஜினியர் பொம்மை என அழைத்தால், மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.

Share
பெங்களூரு-"என்னை இன்ஜினியர் பொம்மை என அழைத்தால், மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். எனக்குள் உள்ள இன்ஜினியர் எப்போதும் விழிப்புடன் இருப்பார்," என முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.

சர் எம்.விஸ்வேஸ்வரய்யாவின், 161வது பிறந்த நாளையொட்டி, பெங்களூரில் நேற்று நடந்த நிகழ்ச்சியை, முதல்வர் பசவராஜ் பொம்மை துவங்கி வைத்தார்.அவர் பேசியதாவது:நாங்கள் பொது வாழ்க்கையில் இருக்கிறோம். நான் முதல்வராக பணியாற்றலாம். ஆனால் ஒவ்வொரு விஷயத்தையும், அலசி, ஆழமாக ஆராய்ந்து பார்ப்பது எனக்குள் இருக்கும் பொறியாளர் தான். என்னை இன்ஜினியர் பொம்மை என அழைத்தால், மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.

எனக்குள் உள்ள இன்ஜினியர் எப்போதும் விழிப்புடன் இருப்பார்.விஸ்வேஸ்வரய்யா, பொறியாளராக இருந்தவர். மைசூரு திவானாக, சிறந்த நிர்வாகியாக பல சாதனைகளை செய்தார். அவரது பணிகள், சாதனை, வாழ்க்கை மற்றவருக்கு வழி காட்டியாக அமைந்துள்ளது. இன்றைய பொறியாளர்கள், விஸ்வேஸ்வரய்யாவின் பணிகள், சாதனைகளில் ஓரளவு செய்வதே, அவருக்கு செலுத்தும் உண்மையான கவுரவம்.இப்போது விஸ்வேஸ்வரய்யா இருந்தால், எந்த பிரச்னைகளுக்கு, எப்படி தீர்வு கண்டிருப்பார் என, நம்மை நாமே கேட்டுக்கொண்டு, பதில் கண்டு கொண்டு, அதன்படி பணியாற்ற வேண்டும்.அரசின் பணம், பொது மக்களின் பணமாகும். நாம் நம் வீட்டை எப்படி தரமாக கட்டிக் கொள்வோமோ, அதே போன்று அரசுப்பணியையும், பொறியாளர்கள் செய்ய வேண்டும்.விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்த நாளை, உழைப்பாளர்களுக்கு அர்ப்பணிக்கிறோம். அவர் இல்லையென்றால், பொறியாளர்கள் தொலைந்து போயிருப்பர். உழைப்பாளர்கள் நாட்டின் முதுகெலும்பு. இன்று ஒருநாள் மட்டும், விஸ்வேஸ்வரய்யாவை நினைத்தால் மட்டும் போதாது. அவரது கொள்கையை, எப்போதும் பின்பற்ற வேண்டும். அவர் விரும்பிய மாநிலத்தை உருவாக்கலாம்.விஸ்வேஸ்வரய்யா நேரத்தின் முக்கியத்துவத்தை புரிந்தவர். நேரம் தவறாமையை பின் பற்றுவார்.இவ்வாறு அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement