dinamalar telegram
Advertisement

கோவில்கள் இடிப்பால் மாநிலம் முழுவதும் பதற்றம்

Share
பெங்களூரு-"கோவில்களை இடிப்பதால், மாநிலம் முழுவதும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பா.ஜ., அரசு இருக்கும் போதும், கோவில்களை இடித்திருப்பது சரியல்ல. இது குறித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டது தவறு," என கிராம அபிவிருத்தி, பஞ்சாயத்துராஜ்துறை அமைச்சர் ஈஸ்வரப்பா தெரிவித்தார்.பெங்களூரில், அவர் நேற்று கூறியதாவது:உச்சநீதிமன்றத்தின் உத்தரவு, ஏராளமாக உள்ளது. சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள கோவில்களை பற்றி பட்டியல் தயாரிக்கட்டும். ஆனால் அவற்றை இடிக்கக்கூடாது. பா.ஜ., இந்திய கலாசாரம், பாரம்பரியத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கட்சி.கலாச்சாரம், பாரம்பரியம், இந்துத்வாவை காப்பாற்றுவதற்காகவே, பா.ஜ.,வை மக்கள் தேர்ந்தெடுத்தனர். இத்தகைய கட்சி ஆட்சியில் இருக்கும் போது, கோவில்களை இடித்தது பெரிய தவறு. மாநிலத்தின் எந்த இடத்திலும், கோவில்களை இடிக்கக்கூடாது. கோவில்களை மட்டும் எதற்காக இடிக்கின்றனர் என்பது தெரியவில்லை.காங்கிரஸ் தலைவர்கள் கூறுவதில் தவறில்லை. இப்போதாவது கோவில்களை காப்பாற்ற வேண்டுமென்ற எண்ணம், காங்கிரசாருக்கு தோன்றியுள்ளது.கோவில்களை இடிக்கிறார்களே என, மாநில மக்கள் பதற்றமடைந்துள்ளனர். மைசூரில் கோவில்களை இடிப்பது குறித்து, முதல்வர், சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் அனுமதி கேட்காமலேயே, மாவட்ட கலெக்டர் முடிவு செய்தது தவறு. இனி ஒரே ஒரு கோவிலையும், இடிக்கக்கூடாது என, முதல்வரிடம் பேசுவேன். மக்கள் பயப்பட வேண்டாம்.இவ்வாறு அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா

    ஓட்டுக்கள் வாங்க அரசியல் வாதிகள் புறம்போக்கு நிலங்களில் கோயில்கள் கட்டுவதை சட்ட பூர்வமாக்க முயற்சிக்கின்றனர்.

Advertisement