dinamalar telegram
Advertisement

சீக்ரெட் சிங்காரம்

Share
கை கட்சியில் புல்லுக்கட்டு!புல்லுக்கட்டுக்காரரை முன்பு பூ கட்சிக்கு தாவச் சொல்லி, 5 கோடி ரூபாய் வரை பேரம் நடந்ததாம். அதற்கான தொகையை புல்லுக்கட்டுக்காரர் வீட்டில் கட்டு கட்டாக, பூக்காரங்க வைத்து விட்டு போனாங்க.ஆனாலும், கட்சி தாவாமல் திடமா இருந்தார். அவருக்கு புல்லுக்கட்டு கட்சியில் உரிய மரியாதையே இல்லையாம். அதனாலே, கோலாரின் 'மாஜி' மந்திரியான இவர், மனம் மாறி விட்டார்.கை கட்சியில் சேரப் போகிறார். இதற்கு சீனிவாசப்புரா கைக்காரரு பாலம் அமைத்திருக்கிறார். சமீப காலமாவே, புல்லுக்கட்டு தலைமை மீது வெறுப்புல இருந்தவரு. மாஜி முதல்வரை வாய்க்கு வந்தவாறு தாளிச்சிட்டாராம். இதனால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் போறதா தெரிவிச்சிருக்காங்க.'அவங்க என்ன நடவடிக்கைகள எடுக்கிறது. நானே கட்சியை விட்டு வெளியேறப்போவதா முடிவு செய்திட்டேன்'னு தீர்மானிச்சிட்டாராம். மாநில கைக்கார தலைவருடன் ஒரு கட்ட பேச்சு முடிஞ்சிருக்கு.விபத்துக்கு யார் பொறுப்பு?சிந்தாமணி சாலை விபத்து எட்டு உயிர்களை பறித்த சம்பவம், சமீபத்தில் நடந்தது. அரசியல்வாதிகள் எல்லாம் ஓடோடிப் போய் உதவிகளையும் ஆறுதல்களையும் சொன்னாங்க.விபத்து நடந்த இடம், காக்கிகாரங்க சோதனையில் ஈடுபட்ட இடமாகும். 'காக்கி சட்டைக்காரர்களை சோதனையில் ஈடுபட செய்ய வேணாம்'னு சீனிவாசப்பூர் அசம்பிளிகாரர் பவர் காட்டி, தகராறு செய்து, அங்கு காக்கிகாரங்களுக்கு வேலையில்லாமல் ஆக்கிட்டாரு.அந்த இடத்தில் தான் பயங்கரமான விபத்து நடந்திருக்கு. விபத்துக்கு காரணமே சீனிவாசப்பூரின் கைக்காரரு தான்னு காக்கிகாரங்க பழி போட்டிருக்கிற 'வீடியோ' சமூக வலைத்தளத்தில் வைரலாகி இருக்காம். இது கைக்காரருக்கு களங்கமாக்கி இருக்காங்க!'கார் பாஸ்' மரியாதை!ஒவ்வொரு எம்.எல்.ஏ.,வுக்கும் விதான் சவுதாவுக்குள் நுழைய கார் பாஸ் கொடுத்திருக்காங்க. எம்.எல்.ஏ.,க்கள் காரை கண்டதும் சாலை போக்குவரத்து பாதுகாப்புக்காரங்களும் ராஜ மரியாதை தராங்க. இது வழக்கமா நடைமுறையில் இருக்குது.எம்.எல்.ஏ., பாஸ் ஒட்டப்பட்ட காரில் எம்.எல்.ஏ.,க்கள் பெரும்பாலும் இருப்பதில்லை. ஆனால், அவரோட உறவுக்காரங்க தான் அந்த காரில் போறாங்க.அவங்களுக்கும் அரசின் ஏகபோக மரியாதை கிடைத்து வருது. இவங்க சர்வ சாதாரணமாக டிராபிக் ரூல்ஸையும் மீறினாலும். யாரும் கண்டுக்கிறதில்லையாம்.கம்பன் வீட்டு கட்டுத் கறியும் கவிபாடும்னு சொல்வதுபோல் எம்.எல்.ஏ., வீட்டு பப்பிக்களுக்கும் மரியாதைக்கு பஞ்சமில்லை.எம்.எல்.ஏ., பாஸ் உள்ள காரில் யாரா இருந்தாலும். பலப்பேர் மரியாதைக்கு சல்யூட் அடிக்குறாங்க.மாற்றம் வரும்னு சொன்னாரே!பள்ளிகள், கல்லுாரிகள் துவங்கி 20 நாட்கள் கடந்து விட்டது. பல கிராமங்களுக்கு பஸ் வசதி இல்லாததால் மாணவர்கள் 60 சதவீதம் பேர் கூட ஆஜர் ஆக முடியல.பல கிராம மாணவர்கள், சதவீதப்படி ஆறாம் வகுப்பில் 43.50, ஏழாம் வகுப்பில் 42.50, எட்டாம் வகுப்பில் 37.33, ஒன்பதாம் வகுப்பில் 53.59, பத்தாம் வகுப்பில் 56.24 சதவீதம் பேர் மட்டுமே பள்ளிகளில், கல்லுாரிகளில் ஆஜர் என சொல்றாங்க.பெருசா மாற்றம் செய்ய போறதாவும், இழப்பில் இருப்பதை லாபமாக மாற்ற போவதாகவும் போக்குவரத்து துறையோட 'ஸ்ரீ' மந்திரி பேட்டியில் சொல்லி இருந்தாரே...பஸ்களே இயங்காததால் பள்ளி, கல்லூரிகளுக்கே மாணவர்கள் செல்ல முடியலையே இதுதான் பெரிய மாற்றமான்னு யோசிக்க வெச்சிருக்கு!
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement