dinamalar telegram
Advertisement

துங்கபத்ரா அணையில் உபரிநீர் வெளியேற்றம்

Share
பல்லாரி-துங்கபத்ரா அணைப்பகுதியில் அதிக மழை பெய்ததால், உபரி நீர் வெளியேற்றப்படுவதால், உலக பிரசித்தி பெற்ற ஹம்பியின் நினைவிடங்கள் நீரில் மூழ்கியுள்ளன.விஜயநகர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஹொஸ்பேட் அருகிலுள்ள துங்கபத்ரா அணைக்கு, பெருமளவில் தண்ணீர் வருகிறது. அணையின் பாதுகாப்பை கருதி, 60 ஆயிரம் கனஅடி தண்ணீர், நேற்று திறந்து விடப்பட்டது. தண்ணீர் திறந்து விடப்படுவது பற்றி, நேற்று முன் தினமே பல்லாரி, விஜயநகர், கொப்பல், ராய்ச்சூர், கடப்பா, ஆனந்தபுரா, மெஹபூப் நகர் மாவட்ட நிர்வாகங்களுக்கு, துங்கபத்ரா அணை நீர்ப்பாசன வாரியம் தகவல் தெரிவித்து விட்டது.அணையிலிருந்து பெருமளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டதால், உலக பிரசித்தி பெற்ற, ஹம்பியின் பல நினைவிடங்கள், மண்டபங்கள் நீரில் மூழ்கியுள்ளன. ஆற்றங்கரை அருகில் பொது மக்கள் செல்லக்கூடாது என, விஜயநகர் மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.மலைப்பகுதி மாவட்டங்களில், கன மழை பெய்வதால், நவிலு தீர்த்தா அணையிலிருந்து, மல்லப்பிரபா ஆற்றுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதால், ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement