dinamalar telegram
Advertisement

மெட்ரோ ரயில் பாதைகளுக்காக மேம்பாலங்கள் இடிக் க திட்டம்

Share
பெங்களூரு,-மெட்ரோ ரயில் பாதைகளுக்கு வழி அமைத்து கொடுக்க, பி.எம்.ஆர்.சி.எல். எனும் பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட், மேம்பாலங்களை இடிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக பெங்களூரு மாநகராட்சியிடம் அனுமதி கேட்டுள்ளது.வாகன போக்குவரத்து நெருக்கடிக்கு, தீர்வு காணும் வகையில், பெங்களூரின் ஜெயதேவா இருதய நோய் மருத்துவமனை அருகில், 21 கோடி ரூபாய் செலவில், மாநகராட்சி மேம்பாலம் கட்டியிருந்தது. மெட்ரோ ரயில் பாதைக்காக, இந்த மேம்பாலம் இடிக்கப்பட்டது. தற்போது மற்றொரு பாலத்தை இடிக்க, பி.எம்.ஆர்.சி.எல்., திட்டமிட்டுள்ளது.பெல்லந்துார் மேம்பாலம், மத்திய பட்டு வாரியம், காடுபீசனஹள்ளி சுங்கப்பாதை நடுவிலுள்ள, 5 அடி உயரமான மேம்பாலத்தை இடிக்க, மாநகராட்சியிடம், பி.எம்.ஆர்.சி.எல்., அனுமதி கோரியுள்ளது. மேம்பாலங்கள் மட்டுமின்றி மெட்ரோ பாதைக்காக அறிவிப்பு பலகைகள், பெயர் பலகைகள், பஸ் நிலையங்களும் கூட இடிக்கப்படுகின்றன.பி.எம்.ஆர்.சி.எல்., கடிதத்துக்கு, மாநகராட்சி இன்னும் பதிலளிக்கவில்லை.பி.எம்.ஆர்.சி.எல்., அதிகாரி ஒருவர் கூறியதாவது:திட்டத்தின் படி பணிகள் நடந்தால், மெட்ரோ பாதைக்காக, இடிக்கப்பட்ட இரண்டாவது மேம்பாலம், பெல்லந்துார் மேம்பாலமாக இருக்கும். பெல்லந்துார் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்க, மேம்பாலத்தை இடிப்பதை தவிர, வேறு வழியில்லை.மெட்ரோ திட்டத்தின், '2 ஏ' கட்டத்தில் மத்திய பட்டு வாரியம், எச்.எஸ்.ஆர்., லே -- அவுட், அகரா, இப்பலுர், பெல்லந்துார், காடுபீசனஹள்ளி மெட்ரோ ரயில் நிலையங்கள் வரும்.பெல்லந்துார் மேம்பாலம் உட்பட மற்ற மேம்பாலங்களை இடிக்க, பி.எம்.ஆர்.சி.எல்., உடன் ஒருங்கிணைந்து பணியாற்ற, மாநகராட்சி பொறியாளர்களை நியமிக்கும்படி, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement