dinamalar telegram
Advertisement

பஸ் போக்குவரத்து துவங்கும்

Share
தாவணகரே,-கிராமத்தில் சாலை அமைந்து, பஸ் போக்குவரத்து துவங்கும் வரை, திருமணம் செய்து கொள்வதில்லை என, இளம் பெண் சபதம் செய்துள்ளார்.தாவணகரே, ஹூப்ளி அருகில், எச்.ராம்புரா கிராமம் உள்ளது. மலைக்குன்றுகள் நிறைந்துள்ள இக்கிராமத்தில், 50 குடும்பங்கள் வசிக்கின்றன.கிராமத்தில் மொபைல் நெட் ஒர்க், சரியாக கிடைப்பதில்லை. சரியான சாலை இல்லாததால், அரசு பஸ்கள் வருவதில்லை. பஸ்கள் இல்லாத காரணத்தால், நகரிலோ, உறவினர் வீட்டிலோ தங்கியிருந்து தான் மாணவர்கள் படிக்கின்றனர்.இந்த கிராமத்திலுள்ள இளைஞர்களுக்கு, யாரும் பெண் கொடுப்பதில்லை. இங்குள்ள இளம்பெண்களை திருமணம் செய்ய, வேறு ஊர்களின் இளைஞர்கள் தயாராக இல்லை.பெண் பார்ப்பதற்காக கிராமத்துக்கு வருவோர், சாலையின் அவல நிலையை கண்டு, அப்படியே திரும்பி சென்று விடுகின்றனர்.மாணவர், மாணவியர் படிப்பை விட, சாலை பிரச்னையால் அதிகம் அவதிப்படுகின்றனர். நல்ல சாலை அமைக்கும்படி, அரசிடம், மக்கள் பிரதிநிதிகளிடம் வேண்டுகோள் விடுத்தும் பயனில்லை.இதனால் மனம் நொந்த பிந்து என்ற இந்த கிராம இளம்பெண், இந்த கிராமத்துக்கு சாலை அமைந்து, பஸ் வசதி கிடைத்தால் தான் திருமணம் செய்து கொள்வதாக, சபதம் செய்துள்ளார்.இது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் பசவராஜ் பொம்மை உட்பட, பலருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement