dinamalar telegram
Advertisement

கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும்

Share
பெங்களூ-'கர்நாடகாவின் கடலோர மாவட்டங்களில், அடுத்த இரண்டு நாட்கள் அதிக அளவில் மழை பெய்யும் அறிகுறிகள் தென்படுகின்றன' என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்துள்ளது. எனவே, கர்நாடகாவின் கடலோர மாவட்டங்களான உத்தரகன்னடா, தட்சிண கன்னடா, உடுப்பியில், அடுத்த இரண்டு நாட்கள் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது. இம்மாவட்டங்களில் 'எல்லோ அலர்ட்' எனப்படும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், பாகல்கோட், பெலகாவி, பீதர், தார்வாட், கதக், கலபுரகி, கொப்பல், ராய்ச்சூர், விஜயபுரா, யாத்கிர், பெங்களூரு ரூரல், பெங்களூரு நகர், சிக்கமகளூரு, ஹாசன், குடகு, ஹாவேரி, மைசூரு, ஷிவமொகா மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்யும்.பெங்களூரின், பல இடங்களில் மேகமூட்டமாக வானிலை நிலவும். அவ்வப்போது வெயிலும் இருக்கும். அதிகபட்சம் 29 டிகிரி செல்ஷியஸ், குறைந்தபட்சம் 21 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement