dinamalar telegram
Advertisement

நிபா தொற்று பீதியால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இளைஞர்கள் மருத்துவ அறிக்கை

Share
மங்களூரு-'நிபா' தொற்று பீதியால், மங்களூரு மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த இளைஞரின் மருத்துவ அறிக்கை, மாவட்ட சுகாதாரத்துறையிடம் வந்தடைந்தது. அந்த இளைஞருக்கு நிபா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதால், மாவட்ட நிர்வாகம் நிம்மதியடைந்துள்ளது.உத்தரகன்னடா, கார்வாரை சேர்ந்த இளைஞர் ஒருவர், கோவாவில் 'மைக்ரோ பயோலாஜிஸ்ட்' ஆக பணியாற்றுகிறார். மூன்று நாட்களுக்கு முன் மங்களுரு வந்திருந்த இவருக்கு, நிபா தொற்று அறிகுறி இருந்தது.எனவே, மங்களூரு மாவட்ட மருத்துவமனையில், பரிசோதனை செய்து கொண்டார். அவரை தனியறையில் வைத்து கண்காணித்தனர். நிபா தொற்றுள்ளதா என்பதை, உறுதி செய்து கொள்ள, இவரது ரத்தம், சளி மாதிரிகள், மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரின் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது.அங்கிருந்து நேற்று அறிக்கை வந்துள்ளது. அதில் அவருக்கு நிபா வைரஸ் தொற்று இல்லை என்பதை தெரிவித்து, 'நெகடிவ்' என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதால், சுகாதார அதிகாரிகள் நிம்மதியடைந்தனர்.சுகாதார அதிகாரி கிஷோர் கூறியதாவது:தனக்கு நிபா தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தில், இளைஞர் தானாக முன் வந்து, பரிசோதனைக்கு உட்பட்டார். அவருக்கு நெகடிவ் என, அறிக்கை வந்துள்ளது.கேரளாவிலிருந்து கர்நாடகாவுக்கு நிபா தொற்று பரவி இருக்கலாம் என்ற பீதி மறைந்துள்ளது.இவ்வாறு இவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement