dinamalar telegram
Advertisement

லஞ்சம் கேட்டஅதிகாரிகள்கைது

Share
சித்ரதுர்கா-தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு, நிவாரணம் வழங்க லஞ்சம் கேட்ட மூன்று பேரை, ஏ.சி.பி., எனும் ஊழல் ஒழிப்பு படை போலீசார் கைது செய்தனர்.சித்ரதுர்காவின் ஹிரியூரின், தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்காக, நேத்ரா கரியப்பா என்பவரின் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதற்கு நிவாரணம் வழங்கும்படி அவர் கோரினார்.நிவாரண தொகை கிடைக்க வேண்டுமானால், ஆறு லட்ச ரூபாய் லஞ்சம் தர வேண்டுமென, சித்ரதுர்காவின் நிலம் கையகப்படுத்தும் சிறப்பு அதிகாரி வீரேஷ் குமார், மேலாளர் மோகன், ஓட்டுனர் மன்சூர் கேட்டனர்.இது குறித்து ஏ.சி.பி.,யில், நேத்ரா கரியப்பா புகார் அளித்தார். விசாரணை நடத்திய ஏ.சி.பி., அதிகாரிகள், நேற்று காலை வீரேஷ்குமார், மோகன், மன்சூரை கைது செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement