dinamalar telegram
Advertisement

கொரோனா மரணங்களை மறைக்கும் சுகாதாரத்துறை

Share
அன்னுார், : அன்னுார் வட்டாரத்தில், கடந்த ஒரு மாதத்தில், மூன்று பேர் கொரோனாவால் இறந்தும், சுகாதாரத்துறை அதை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.

அன்னுார் வட்டாரத்தில், ஒரு பேரூராட்சி, 21 ஊராட்சியில் ஒன்றரை லட்சம் பேர் வசிக்கின்றனர்.கடந்த 2020 மார்ச் மாதம் கொரோனா பாதிப்பு துவங்கியது. இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமாகினர். இதுவரை 80 பேர் உயிரிழந்துள்ளதாக, தெரிகிறது. ஆனால், வெறும் 3 பேர் மட்டுமே இறந்ததாக சான்று தரப்பட்டுள்ளது.கடந்த அ.தி.மு.க., ஆட்சியின்போது, 70 பேர் அன்னுார் வட்டாரத்தில் கொரோனா பாதிப்பில் உயிரிழந்தனர். பேரூராட்சி துாய்மை பணியாளர், தனியார் பள்ளி தாளாளர், ஓய்வு பெற்ற ஆசிரியர் என, 70 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தனர். எனினும் மாரடைப்பு, மூச்சுத் திணறல் உள்ளிட்ட காரணங்களால் அவர்கள் உயிரிழந்ததாக சுகாதாரத் துறை தெரிவித்தது. இந்நிலையில், கடந்த மே மாதம் தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பிறகு, கடந்த 4 மாதங்களில், 10 பேர் அன்னுார் வட்டாரத்தில் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனை, அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தனர், கடந்த ஒரு மாதத்தில் மட்டும், அ.தி.மு.க., தொழிற்சங்க நிர்வாகி உள்பட 3 பேர் கொரோனாவால் இறந்தனர். ஆனால், ஒரு மரணத்தைக் கூட, கொரோனா இறப்பாக, சுகாதாரத்துறை பதிவு செய்யவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், 'துாய்மைப் பணியாளர், ஓய்வு பெற்ற ஆசிரியர் உள்ளிட்டோர் கொரோனாவால் இறந்ததை சுகாதாரத்துறை உறுதி செய்தால், அவர்களுக்கு அரசு நிவாரணம் கிடைக்கும். ஆனால், பலமுறை மருத்துவமனைக்கு சென்று கோரிக்கை விடுத்தும், வேறு காரணங்களைக் குறிப்பிட்டே இறப்பு சான்று வழங்குகின்றனர்.இதனால் இறந்தவர்களின் குடும்பத்தினர் நிவாரணம் பெற முடியாத நிலை உள்ளது. கடந்த அ.தி.மு.க., ஆட்சியிலும், இந்த நடைமுறையை கடைப்பிடித்தனர். ஆட்சி மாறி, தி.மு.க., வந்த பிறகும், இதே போல் கொரோனா இறந்தால் கொரோனா இறப்பு என சான்று தருவதில்லை' என்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement