dinamalar telegram
Advertisement

இது உங்கள் இடம்: போர் அடிக்கிறதா உதயநிதி?

Share

உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:ரவி சர்வோத்தமன், கோவையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சேப்பாக்கம் தி.மு.க., - எம்.எல்.ஏ., உதயநிதியால், சட்டசபையில் ரொம்ப நேரம் உட்கார முடியவில்லையாம். எதிர்க்கட்சியினர் யாரும், ஆளும் அரசினை எந்த கேள்வியும் கேட்பதில்லை; மாறாக, பாராட்டு தெரிவிக்கின்றனர்... அதனால், 'போர்' அடிக்கிறதாம் உதயநிதிக்கு!
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரன், இந்நாள் முதல்வர் ஸ்டாலினின் மகன் என்ற தகுதியை தவிர, வேறொன்றும் இல்லாமல், சட்டசபைக்குள் எளிதாக நுழைந்திருக்கும் உதயநிதிக்கு, போர் அடிக்கத் தான் செய்யும். வாரிசு அடிப்படையில், எந்தவித உழைப்பும், கஷ்டமும் இல்லாமல், கட்சி மற்றும் ஆட்சி பொறுப்புகள் தேடி வருவதால், மக்கள் பிரதிநிதி என்ற அங்கீகாரம் பயனற்ற ஒன்றாகத் தான் தெரியும்.

சட்டசபையில் முதல்வர் ஸ்டாலினுக்கு நேர் பின்புறம் இருக்கை வழங்கி, எப்போதும் கேமராவில் படும்படி அமர வைக்கப்பட்டுள்ளதால், உதயநிதி நொந்து கொள்வதில் ஆச்சரியமில்லை.ஒரு காலத்தில் கண்ணியமிக்கதாக சட்டசபை இருந்தது; அதை நாகரிகமற்ற பேச்சால், செயலால் மாற்றியது யார் என்பது உதயநிதிக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
சட்டசபை உறுப்பினர் பணியை பயனுள்ள வகையில் எவ்வாறு செய்வது என யோசித்து, தேவையற்ற பேச்சுகளை தவிர்த்து, உருப்படியான விஷயங்களில் கவனம் செலுத்தி செயல்பட்டால், உதயநிதிக்கு, போர் அடிக்காது. முயற்சி செய்யுங்களேன் முதல்வர் ஸ்டாலினின் செல்லப் பிள்ளையான உதயநிதி அவர்களே!
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (94)

 • DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ

  அப்பன் முதலமைச்சர் என்பதால் போர் அடிக்காமல் இருக்க தனிப்பட்ட சலுகைகளை எதிர் பார்க்கிறாரா உதயநிதி ?

 • jayvee - chennai,இந்தியா

  நெற்றியில் குங்குமம் வைத்தால் பெண்களை போல் என்று கூறும் அரேபியா அடிமைக்கு.. மீசை இல்லாமல் ஆடு போல தாடிவைத்தவர்களை பலி ஆடு என்று சொன்னால் சரியாகஇருக்குமா ?

 • meenakshisundaram - bangalore,இந்தியா

  சட்ட சபையில் கிரிக்கெட் போல 'சீர் கேர்ள்ஸ் அனுமதிக்கலாம் முன்னணி அல்லது முதன்மை மானிலம் ஆயிடும்

 • meenakshisundaram - bangalore,இந்தியா

  உண்மைதான் .ஏதோ சினிமா நண்பரே கூட்டம்னு திரிஞ்சுக்கிட்டிர ஆளை போயி சட்ட சபை யில் உட்கார வாய்த்த மக்களை தான் சொல்லணும் .பிரெண்ட்ஸ் களுடன் ஒரு ரவுண்டு இல்லே ரெண்டு ரவுண்டு போனா 'சரி 'ஆயிடுங்களே இன்னொன்னு இவரு யோகம் ஆளும் கட்சி ஆயிட்டாரு .இல்லேன்னா அப்பனோட சேந்து 'வெளி நடப்பாவது 'செய்யலாமே போர் அடிக்காது .

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. இந்த இமெயிலாளருக்கு "போரடிக்கிறது" என்று வாட்ஸப்பில் மெஸேஜ் போட்டாரா? உதயநிதி ஸ்டாலினைப் பார்த்து வயிறெரிங்க. வேற வழியே கிடையாது. இவரது தொகுதி மக்கள் மற்றும் இவரது தொகுதி கோவில் அர்ச்சகர் களிடம் உதயநிதி பற்றி கேட்டுப் பார்க்கவும். நோகாமல் பாஜக தலைவரானார் ஒரு ஐபிஎஸ். பாஜக விற்காக போஸ்டர் ஒட்டுபவர்களைச் சேர்க்க மாட்டீர்கள் தெரியும் ஆனால், நெற்றியில் பெண்பிள்ளை மாதிரி குங்குமம் எல்லாம் வைத்துக் கொண்டு வீதிவீதியாக காவிக் கொடியுடன் சுற்றி வந்து மீட்டிங் பேசி, டிவியில் வந்து பேசிய பொ.ரா.கி.. நாராயணன் எலல்லாரையும் ஓரங்கட்டி விட்டு பாஜக விற்கு எதுவுமே செய்யாமல் தலைவரானவர் பற்றியும், இணை அமைச்சர் ஆனவர் பற்றியும் இமெயிலாளருக்குத் தெரியவில்லை. வாசகர்களுக்குமா தெரியவில்லை??

  • தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா

   உதயநிதியின் பாடி லாங்க்வேஜ் அவருக்கு போரடிக்கிறது என்பதை உணர்த்துகிறது அவருடைய தொகுதியிலேயே அரசின் கவனத்தைப் பெற பிரச்னைகள் இருக்கலாம் இருக்கும் இது வரை பங்கேற்ற கூட்டங்கள் எதிலாவது எழுப்பியிருக்கிறாரா ?

Advertisement